திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலைக்கு மாலை போட போகிறீர்களா.. அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

Google Oneindia Tamil News

சபரிமலை : மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரிமலையில் கடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவும். ஆனால் இந்த முறை தினசரி ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவிலலை. 2 முறை டெண்டர் விட்டும் எந்த பலனும் இல்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது.

16ம் தேதி முதல், ஆன்ைலனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை கால தொடக்கத்தில் ஒருநாளில் 1,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 2,000 பேரும், அடுத்த கட்டத்தில் தினமும் 5,000 பேரும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா காரணமாக மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிரம்பை விவாகரத்து செய்துவிடுவார் மெலனியா... Ex உதவியாளர்கள் பகிர்ந்த ஷாக் தகவல்.. இது என்ன சோதனை..!டிரம்பை விவாகரத்து செய்துவிடுவார் மெலனியா... Ex உதவியாளர்கள் பகிர்ந்த ஷாக் தகவல்.. இது என்ன சோதனை..!

அஷ்டாபிஷேகம் நடக்கும்

அஷ்டாபிஷேகம் நடக்கும்

சபரிமலை ஐயப்பன் கோயில் புஷ்பாபிஷேகத்துக்கான மலர்கள், தமிழகம், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுவது வழக்கம். இவற்றின் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இந்தாண்டு மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நலை

தயார் நலை

பக்தர்கள் இருமுடிகளில் கொண்டு வரும் நெய்த்தேங்காய்கள் சிறப்பு கவுன்டர்கள் மூலம் சேகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்குப் பதிலாக ஏற்கனவே அபிஷேகம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நெய் தேங்காய் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாதைகள்

இரண்டு பாதைகள்

.மேலும், பக்தர்கள் வடசேரிக்கர - பம்பை மற்றும் எருமேலி - பம்பை ஆகிய 2 முக்கிய பாதைகள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை.

யாரும் முன்வரவில்லை

யாரும் முன்வரவில்லை

பொதுவாக மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர். ஆனால், இந்த ஆண்டு 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி போன்ற இடங்களில் வாகன பார்க்கிங், தற்காலிக கடைகள், கழிப்பறை, ஸ்டுடியோ, தேங்காய் விற்பனை போன்றவற்றிற்கான ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. 2 முறை இ-டெண்டர் விட்டும் பலன் இல்லை. இதனால், இனி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
There will be stiff competition to bid on shops in Sabarimala during the mandala pooja and magara Puja seasons. But this time it was announced that only a thousand people were allowed in daily so no one came forward to bid on the shops. There is no one intrest in the tender 2 times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X