திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயநாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு.. பச்சிளம் குழந்தையையும் விடவில்லை.. பத்திரமாக மீட்ட ராணுவம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kerala Rain| தொடர் மழை... கடும் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா

    திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிலிருந்து பச்சிளம் குழந்தையை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

    தென்மேற்கு பருவமழை படுதீவிரம் அடைந்துள்ளது. இதனால் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின.

    Army Personnel rescues a new born baby from Wayanad, Kerala

    இந்த மழையின் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

    கேரளத்தில் தொடர்ந்து 3 நாட்களாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த நிலையில் ராணுவத்தினர் அங்கு தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

    வயநாட்டில் புதிதாக பிறந்த குழந்தையை வெள்ள பாதிப்பிலிருந்து ராணுவத்தினர் மீட்டனர். அது போல் முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.

    English summary
    Army Personnels rescue a new born baby from Wayanad, Kerala. They are doing continuous rescue operations in the flood hit regions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X