திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாயகம் திரும்புகிறேன்.. ஆசையாக பேஸ்புக்கில் பதிவு செய்த சரஃபு.. கோழிக்கோடு விமான விபத்தில் பலி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவர், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் தாயகம் திரும்புகிறேன் என மகிழ்ச்சியுடன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது மனதை வேதனையடையச் செய்கிறது.

Recommended Video

    Kerala விமான விபத்து நடந்தது எப்படி? பரப்பு பின்னணி

    வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக விமானங்களும் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 184 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு புறப்பட்டது. இந்த விமானம் கனமழையுடன் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    கேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி கேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி

    டேபிள்டாப்

    டேபிள்டாப்

    இரு முறை தரையிறங்க முயற்சித்த நிலையில் இரண்டாவது முறை ஹார்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. மழை காரணமாகவும் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள்டாப் விமான நிலையம் என்பதாலும் அந்த விமானம் ரன்வேயை சுற்றியிருந்த 35 அடி ஆழ பள்ளத்தில் சறுக்கி விழுந்தது.

    மனைவி, மகளுடன் பயணம்

    மனைவி, மகளுடன் பயணம்

    இதில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். இந்த விமானத்தில் பயணம் செய்து பலியான பயணி ஒருவரின் கடைசி பேஸ்புக் பதிவு வேதனையை தருகிறது. அவரது பெயர் சரஃபு பிலசேரி. இவர் தனது மனைவி, மகளுடன் துபாயிலிருந்து வந்தே பாரத் விமானத்தில் பயணம் செய்ய ஆயத்தமானார்.

    முகத்தில் ஷீல்டு

    முகத்தில் ஷீல்டு

    இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர் என்பதால் துபாயில் விமானத்தில் அமர்ந்ததும் தாயகம் திரும்புகிறேன் என பதிவிட்டிருந்தார். முகத்தில் ஃபேஸ் ஷீல்டு போட்டுக் கொண்டு தனது மனைவி, மகளுடன் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டிருந்தார். ஆனால் விதி அவருக்கு வேறு முடிவை தந்துள்ளது.

    மனைவியும், மகளும்

    மனைவியும், மகளும்

    அதிர்ஷ்டவசமாக சரஃபுவின் மனைவியும் மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தனது மனதிற்கு பிடித்த இடமான கேரளாவுக்கு வரும் தகவலை தனது பேஸ்புக்கில் அளித்த சரஃபு கேரளாவுக்கு திரும்பினார், ஆனால் சடலமாக!

    English summary
    Kozhikode Air mishap victim Sharafu wrote Back to home in his facebook after he boarded from Dubai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X