திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்! புதிய சர்ச்சை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா போலீசாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி உணவு நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் மாட்டுகறி உண்ணும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கேரள ஸ்பெசல் உணவாகவே மாட்டுக்கறி மாறி உள்ளது. கேரளாவின் அசைவ ஓட்டல்களில் மாட்டுக்கறி நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

beef food missing from Kerala Police’s menu from now

இந்நிலையில் கேரள காவல்துறையின் புதிய உணவு மெனுவிலிருந்து மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு போலீஸ் முகாம்களில் புதிய பேட்ஜ்களுக்கான பயிற்சி தொடங்கிய உடனேயே புதிய மெனு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை போலீஸ் அகாடமியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

போலீசார் இதுபற்றி கூறுகையில், மெனுவில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை என்றாலும், மாட்டிறைச்சிக்கு தடை இல்லை. அத்துடன் மாட்டிறைச்சி சாப்பிடகூடாது என எந்த தடையும் கிடையாது என்றனர்.

அரசு மருத்துவமனையில் ஒரு உணவியல் நிபுணரால் இந்த உணவு மெனு தயாரிக்கப்பட்டது என்றும் காவல்துறை தெளிவுபடுத்தி உள்ளது.

இதற்கிடையில், மெனுவிலிருந்து மாட்டிறைச்சி ஏன் தவிர்க்கப்பட்டது அல்லது ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து போலீசார் இன்னும் முறையான விளக்கத்தை அளிக்கவில்லை.

போலீஸ் அதிகாரிகளின் கடைசி பேட்ஜ் பயிற்சியின் போது மாட்டிறைச்சி மெனுவில் இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

English summary
beef food missing from Kerala Police’s menu from now. But police says no direction to avoid beef food
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X