திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாமீ... நான் ஜெயிக்கனும்.. கோவில் கோவிலாக விழுந்து கும்பிடும் பாஜக வேட்பாளர்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்/பெங்களூரு: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக பாஜக வேட்பாளர்கள் பலரும் கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தினர்.

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரை எதிர்த்து போட்டியிடுகிறார் பாஜகவின் ராஜசேகரன். இன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அய்யாகுரு ஆசிரமத்துக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியை கேரளா ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன். திருவனந்தபுரம் தொகுதியில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

BJP Candidates offer prayers

பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், லோக்சபா தேர்தலில் நிச்சயம் நான் வென்று நாடாளுமன்றத்துக்கு செல்வேன் என்றார்.

தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு! தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு!

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரவி கிஷான் இன்று காலை கோவிலுக்கு சென்று வழிபட்டார். கோரக்பூர் தொகுதிதான் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக இருந்தது. ஆனால் இடைத்தேர்தலில் பாஜக கோட்டைவிட்டதால் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
BJP Candidates today offered prayers, before the Loksabha Elections counting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X