திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது: பினராயி விஜயன்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு இம்மாநிலத்தில் இடம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுமுன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

BJP has no space in Kerala, says Kerala CM Pinarayi Vijayan

இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் இடதுமுன்னணிக்கு கிடைத்த வெற்றி மக்களின் வெற்றி. ஐக்கிய ஜனநாயக முன்னணி வலிமையாக இருக்கக் கூடிய இடங்களிலும் கடுமையான போட்டி இருந்தது.

6 மாநகராட்சிகளில் 5-ல் வெற்றி பெற்றிருக்கிறோம். கேரளாவில் மக்களை பிளவுபடுத்த சில சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. இந்த சக்திகளை கேரளா மக்கள் நிராகரித்துவிட்டனர்.

 எது எப்படியோ... கேராளவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது -ரமேஷ் சென்னிதாலா எது எப்படியோ... கேராளவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது -ரமேஷ் சென்னிதாலா

கேரளாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்திவிட்டன. புயல், மழை வெள்ளம், கொரோனா பாதிப்பு என அனைத்து சூழ்நிலைகளிலும் மாநில அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்.

இதற்காகவே மக்கள், இடதுமுன்னணிக்கு வாக்களித்துள்ளனர். இவ்வாறு பினராயி விஜயன் கூறி உள்ளார்.

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan said that the Left Democratic Front has won a comprehensive victory in the local body polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X