திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவுக்கு ஓடிய ராகுல்.... வட இந்தியர்களை அவமதிக்கிறார்... பாஜக தலைவர்கள் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு வருவது புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், அவர் வட இந்தியர்களை அவமதித்துவிட்டார் என பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்தது. நேரு குடும்பத்தினரின் பரம்பரை தொகுதியான அதிலிருந்து தான் ராகுல் காந்தி, மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி, அமேதி, வயநாடு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில், ராகுல் காந்தியால் வயநாடு தொகுதியில் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

தற்போது கேரளா வந்துள்ள ராகுல் காந்தி பேரணி ஒன்றில் பேசுகையில், ""முதல் 15 ஆண்டுகள் வட இந்தியாவில் நான் எம்.பி.யாக இருந்தேன். அங்கு நான் வேறு வகையான அரசியல் செய்ய வேண்டியிருந்தது. அப்படியிருக்கும்போது கேரளாவுக்கு வருவது புத்துணர்ச்சியாக இருந்தது, இங்குள்ள மக்கள் உண்மையில் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவதைக் கண்டேன். பொதுமக்கள் காட்டும் பாசம் மட்டுமல்ல, செய்யும் அரசியலுக்கும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார்.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

தற்போது கேரளா வந்துள்ள ராகுல் காந்தி பேரணி ஒன்றில் பேசுகையில், ""முதல் 15 ஆண்டுகள் வட இந்தியாவில் நான் எம்.பி.யாக இருந்தேன். அங்கு நான் வேறு வகையான அரசியல் செய்ய வேண்டியிருந்தது. அப்படியிருக்கும்போது கேரளாவுக்கு வருவது புத்துணர்ச்சியாக இருந்தது, இங்குள்ள மக்கள் உண்மையில் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவதைக் கண்டேன். பொதுமக்கள் காட்டும் பாசம் மட்டுமல்ல, செய்யும் அரசியலுக்கும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

கேரளாவில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராகுல் காந்தி தேசத்தைப் பிளவுபடுத்த முயல்வதாகவும் அவரது பேச்சு வட இந்தியர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் பல்வேறு பாஜக தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.

பிரிக்க வேண்டாம்

பிரிக்க வேண்டாம்

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "நான் தெற்கிலிருந்து வந்தவன். மேற்கு மாநிலத்திலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். நான் பிறந்தது, படித்தது, வேலை செய்தது எல்லாம் வட மாநிலங்களில்! உலகத்திற்கு நான் ஒட்டுமொத்த இந்தியாவையும் தான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். இந்தியா என்றும் ஒரே தேசம் தான். எங்களை ஒருபோதும் பிரிக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பொய்

தொடர்ந்து பொய்

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, "சில நாட்களுக்கு முன்பு அவர் வடகிழக்கு மாநிலத்திலிருந்து கொண்டு மேற்கு மாநிலங்கள் குறித்து பொய்களைப் பரப்பினார். இப்போது தெற்கே சென்று வட இந்தியாவுக்கு எதிராகப் பொய்களைக் கூறுகிறார். மக்களை பிளவு படுத்தி இனியும் அரசியல் செய்ய முடியாது. மக்கள் இந்த அரசியலை நிராகரித்துவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

கேரளாவுக்கு ஓடியவர்

கேரளாவுக்கு ஓடியவர்

இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டரில், "தனது எம்பி பதவியைக் காப்பாற்றிக் கொள்ளக் கேரளாவுக்கு ஓடியவர் வட இந்தியர்களின் அறிவை கேள்விக்கு உள்ளாக்குகிறார். அவர்கள் தான் பல தலைமுறைகளாக உங்கள் குடும்பத்திற்கு உண்மையாக வாக்களித்தவர்கள். வளர்ச்சி, செயல்திறன் என எதையும் தர முடியாததாலேயே இல்லாததாலேயே ராகுல் காந்தி அங்கு ஓடினார்" என தாக்கி ட்வீட் செய்துள்ளார்.

இந்தியனாக இருக்க வேண்டும்

இந்தியனாக இருக்க வேண்டும்

இந்தியாவின் எந்தப் பகுதிக்கு நீங்கள் சென்றாலும் ராகுல் காந்தி எப்போதும் இந்தியர்களை மேலோட்டமாக தான் காண்பார்கள் என விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், இந்தியர்களைப் புரிந்து கொள்ள ராகுல் காந்தி முதலில் இந்தியனாக இருக்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

English summary
BJP Leaders reaction after Rahul Gandhi's speech in Wayanad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X