திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டியர் சேட்டன்ஸ்.. ஹி இஸ் கம்மிங்.. தமிழ்நாடு தேர்தலை முடித்துவிட்டு கேரளா புறப்பட்ட எச்.ராஜா!

கேரளாவில் நடக்கும் லோக்சபா தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேரளா புறப்பட்டு சென்று இருக்கிறார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் லோக்சபா தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேரளா புறப்பட்டு சென்று இருக்கிறார்.

லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடந்தது.

BJP National Sec. H. Raja reaches Kerala for Election Campaign

தொகுதிகள் 18.. ஆளுக்கு ஒரு எண்ணம்.. இதில் தினகரன் கணக்கு தனி கணக்கு.. என்ன கிடைக்கும்தொகுதிகள் 18.. ஆளுக்கு ஒரு எண்ணம்.. இதில் தினகரன் கணக்கு தனி கணக்கு.. என்ன கிடைக்கும்

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார்.

இந்த தொகுதி ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றது. இதற்காக எச்.ராஜா மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா ''சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும், கடுமையாக பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், பாஜக தொண்டர்களுக்கும், தேசிய உணர்வாளர்களுக்கும், மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள். சிவகங்கையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கும் ஊழல் பணநாயகத்திற்குமான போட்டியில் வெற்றி உறுதி'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் எச்.ராஜா அடுத்தகட்ட பணிகளுக்கு தயாராகி இருக்கிறார். அதன்படி கேரளாவில் நடக்கும் லோக்சபா தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேரளா புறப்பட்டு சென்று உள்ளார். அங்கு இவர் பாஜக கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே சபரிமலை போராட்டத்தின் போது இவரது கேரள பயணம் பெரிய வைரல் ஆனது. தற்போது மீண்டும் அவர் கேரளாவில் பிரச்சாரம் செய்வது அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இவர் கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Lok Sabha Election 2019:BJP National Sec. H. Raja reaches Kerala for Election Campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X