திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்எஸ்எஸ், பாஜகவினர் உள்ளே வர கூடாது.. கேரள வீடுகளில் தெறி போஸ்டர்.. சிஏஏவிற்கு நூதன எதிர்ப்பு!

கேரளாவில் சிஏஏவை எதிர்த்து பலரது வீடுகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர், சிஏஏவை ஆதரித்து பேசும் யாரும் எங்கள் வீட்டிற்குள் வர கூடாது என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் சிஏஏவை எதிர்த்து பலரது வீடுகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர், சிஏஏவை ஆதரித்து பேசும் யாரும் எங்கள் வீட்டிற்குள் வர கூடாது என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். நேற்று இரவும் கூட வள்ளுவர் கோட்டத்தில் சென்னையில் போராட்டம் நடந்தது .

இன்னொரு பக்கம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இளைஞர்கள் முன்னின்று நடத்தி வருகிறார்கள் .

விடுதி காவலரை தாக்கிவிட்டனர்.. ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் மீது எப்ஐஆர் பதிவு!விடுதி காவலரை தாக்கிவிட்டனர்.. ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் மீது எப்ஐஆர் பதிவு!

பிரச்சாரம் செய்ய முடிவு

பிரச்சாரம் செய்ய முடிவு

இந்த நிலையில் நாடு முழுக்க பாஜக கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வீடு வீடாக இது தொடர்பாக பிரச்சாரம் செய்ய உள்ளது. சிஏஏவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறது. சிஏஏவின் நன்மைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய உள்ளது.

பவீடுகள்

இதற்கான பிரச்சாரம் வடமாநிலங்களில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. எல்லோர் வீட்டிற்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் போல இந்த பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களை கேரளாவை சேர்ந்த மக்கள் வித்தியாசமாக டீல் செய்துள்ளனர். இவர்களை எதிர்க்கும் வகையில் தங்கள் வீட்டு வாசலில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

கேரளா வீடுகள்

பெரும்பாலான போஸ்டர்களில், சிஏஏவிற்கு ஆதரவாக பேசும் யாரும் எங்கள் வீட்டிற்கு வர கூடாது. சிஏஏ குறித்து பிரச்சாரம் செய்ய வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு இங்கு அனுமதி கிடையாது. உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் கேரளம் முழுக்க வைரலாகி உள்ளது.

போஸ்டர் எப்படி

அதோடு இன்னும் சில இஸ்லாமியர்கள் வீடுகளில் இது எங்கள் நாடு, நாங்கள் இங்குதான் இருப்போம். எங்களுக்கு பயம் கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பால் எங்களை வெளியேற்ற முடியாது என்று போஸ்டர் அடித்த ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

பெண்கள்

பெண்கள்

தமிழகத்தில் இதேபோல் வீட்டு வாசல்களில் சிஏஏவை எதிர்த்து பெண்கள் கோலம் போட்டனர். தற்போது அதேபோல் கேரளாவில் சிஏஏவை எதிர்த்து போஸ்டர் ஒட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

English summary
CAA protest: RSS and BJPian not allowed in our home: Kerala people posters gone viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X