India
  • search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

**** சாதி.. ஆடியோவால் வம்பாய் சிக்கிய கேரளா சுரேந்திரன்! அடுத்தடுத்த சிக்கல்களால் பாஜகவுக்கு தலைவலி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கூட்டணியில் சேர்வதற்கும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசியதோடு பழங்குடியின சமூக செயல்பாட்டாளரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திர மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பாஜக தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பாஜகவுக்கு இது போறாத காலமோ என்னமொ தெரியவில்லை. கட்சியில் சில தலைவர்களின் சர்ச்சைப் பேச்சுகளால் உள் நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டு தலைவர்கள் இந்திய தூதர்களை அழைத்தூ கண்டிக்கும் அளவுக்கு சிக்கலை சந்தித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த 100 சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசியது உலக அளவிலான தண்டனை பெற்ற நிலையில் தற்போது பழங்குடியினர் சமூகச் செயல்பாட்டை கேரள மாநில பாஜக தலைவர் சாதிப் பேர் சொல்லி திட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கேரள பாஜக தலைவர்

கேரள பாஜக தலைவர்

கேரளா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் சுரேந்திரன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பேட்டியிடு இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள காசர்கோடு மாவட்டத்திற்குட்பட்ட மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெறும் 82 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இதற்கு காரணம் அதே தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுந்தரா என்பவர் போட்டியிட்டார்.

சுரேந்திரன் விவகாரம்

சுரேந்திரன் விவகாரம்


இருவரது பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் தான் சுரேந்திரனின் வாக்குகள் அவருக்கு போய் தோல்வியைத் தழுவினார் என பாஜகவினர் கூறிவந்தனர். இந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுந்தரா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரை வாபஸ் பெற வேண்டும் என சுரேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது. அதற்காக சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு செல்போனையும் கர்நாடக மாநிலத்தில் ஒயின்ஷாப் நடத்த அனுமதியும் வாங்கி தருவதாக சுரேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது.

லஞ்சம் தர பேரம்

லஞ்சம் தர பேரம்

இதையடுத்து சுந்தரா வேட்பு மனுவை வாபஸ் பெற்றார், இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசாரிடம் சுந்தரா வாக்குமூலம் அளித்ததையடுத்து கேரள மாநில போலீசார் சுரேந்திரன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கேரளாவின் புகழ்பெற்ற பழங்குடியின மக்களின் சமூக செயல்பாட்டாளரான ஜானு தலைமையிலான ஜனநாயக ராஷ்டீரிய கட்சியை, பாஜக கூட்டணி சேருமாறு சுரேந்திரன் அணுகியதாக கூறப்படுவது.

வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

அதற்கு ஈடாக ரூபாய் 10 லட்சம் ஸ்விப்ட் கார் ஒன்றையும் தருவதாக சுரேந்திரன் ஜானுவிடம் பேசியதாக செல்போனி ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோ ஒன்று வெளியானது.கேரள அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த ஆடியோவையும் கைப்பற்றிய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சுந்தராவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்குடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் ஜானு மற்றும் சுந்தராவை அவர்களின் சமுகத்தை குறிப்பிட்டு ஒருமையில் பேசியுள்ளார். அந்த ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து சுரேந்திரன் மீது வன் கொடுமை தடுப்பில் ஜாமீன் இல்லா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

English summary
The crisis in the BJP leadership has escalated as Kerala state BJP leader Surendra has been charged with bargaining to join the alliance and withdrawing his candidature and insulting a tribal social activist in the name of caste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X