• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சுடிதார் பேன்ட்டைகூட இறுக்கி கட்ட தெரியாது.. பயப்படுவா.. அவள் எப்படி தூக்கில்.. கதறும் பாத்திமா தாய்

|
  தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோம்.. மாணவி பாத்திமாவின் தாய் கண்ணீர்

  திருவனந்தபுரம்: "சுடிதார் பேண்டின் கயிறுகூட கட்டத்தெரியாது அவளுக்கு.. அம்மா இறுக்கி கட்டாதே.. வலிக்குது..ன்னு சொல்லுவாள்.. 18 வயசு ஆகியும், அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாது. அதுக்காகவே அவளுக்கு லெக்கின்சும், ஜீன்சும் வாங்கி தந்தோம்.. சுடிதார் பேன்ட் கயிறின் இறுக்கத்தைகூட தாங்க முடியாதவள், எப்படி தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி தாங்கி கொண்டாளோ" என்று இதயம் வெடித்து குமுறி சொல்கிறார் ஐஐடி மாணவி பாத்திமாவின் அம்மா!

  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். செனைனை ஐஐடியில் படித்து வந்த அவர், திடீரென கடந்த நவம்பர் 9-ம் தேதி ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார் பாத்திமா.

  தற்கொலை குறித்து விசாரணை நடத்தி சென்னை கோட்டூர்புரம் போலீஸார் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறி விசாரணையை முடித்துள்ளனர். ஆனால், தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

  தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்

  சுட்டி

  சுட்டி

  அதேபோல, பாத்திமாவின் அம்மாவும் மகளை பற்றின தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான், மாணவியின் பல விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்தது! நல்ல அறிவுடைய பெண்.. படிப்பில் சுட்டியாக விளங்கி இருக்கிறார் பாத்திமா.. பிளஸ்டூவில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.. சென்னை ஐஐடியிலும் அவர்தான் படிப்பில் நம்பர் ஒன்.

  சரிம்மா

  சரிம்மா

  நாட்டின் சூழல் அறிந்து, பயந்து கொண்டு, எல்லா பிள்ளைகளை போல சாதாரணமாகவே டிரஸ் போட்டுக் கொள்ள வீட்டில் சொல்லவும், "சரிம்மா" என்று மறுபேச்சு பேசாமல் அதன்படி நடந்துள்ளார். பனாரஸில் மேற்படிப்பு படிக்கதான் சீட் கிடைத்ததும் துள்ளி குதித்துள்ளார் பாத்திமா, ஆனால், வடமாநில கும்பல் படுகொலைக்கு பயந்துபோய் வேண்டாம் என்று வீட்டில் பெற்றோர் சொல்லி உள்ளனர்.

  பாசம்

  பாசம்

  "அம்மா நான் ஃபிளைட்டில்தானே போக போறேன்.. ஏன் பயப்படுறே.." என்று தேற்றி உள்ளார். ஆனாலும் பாச போராட்டத்தில் வீழ்ந்துவிட்ட பாத்திமா, பெற்றோரின் சொல்லுக்கு கட்டுப்பட்டும், அவர்களின் பய உணர்வை புரிந்து கொண்டும் சென்னை ஐஐடி வந்து சேர்ந்திருக்கிறார்.

  செமஸ்டர்

  செமஸ்டர்

  ஐஐடியில் கூட முஸ்லிம் நண்பர்களும் பாத்திமாவுக்கு குறைவுதானாம். "அம்மா, அடுத்த செமஸ்டருக்கு படிக்கணும், இப்பவே அதுக்கான புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துட்டேன்" என்று அம்மாவுக்கு தகவலை சொல்லி உள்ளார். அதிலும் 3-வது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கஷ்டமான பாடமாம்.. அதுக்காக இப்பவே டியூஷன் போகட்டுமா என்றுகூட அம்மாவிடம் அட்ஸை கேட்டுள்ளார் பாத்திமா,

  பெண் பிள்ளைகள்

  பெண் பிள்ளைகள்

  இளம்பெண்தான்.. படித்து கொண்டிருப்பது சென்னை ஐஐடிதான்.. இருந்தாலும் இந்த காலத்துல நவீன பெண் பிள்ளைகள் சிலரை போல நண்பர்களோடு ஊர் சுற்றுவது, போன்ற எந்த செயலிலும் பாத்திமா ஈடுபட்டது இல்லையாம். படிப்பை தவிர பாத்திமாவுக்கு எதிலுமே கவனம் சிதறாதாம்.. தெரிந்ததெல்லாம் கிளாஸ் ரூம், ஹாஸ்டல், லைப்ரரி, கேன்டீன்.. இங்குதான் பாத்திமாவின் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

  வலிக்குது

  வலிக்குது

  பாத்திமா பற்றி அம்மா சொல்லும்போது, "சுடிதார் பேண்டின் கயிறுகூட கட்டத்தெரியாது அவளுக்கு.. அம்மா இறுக்கி கட்டாதே.. வலிக்குது.." என்று சொல்லும்போதே கதறி வெடித்து அழுகிறார். 18 வயசு ஆகியும், அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாது. அதுக்காகவே அவளுக்கு லெக்கின்சும், ஜீன்சும் வாங்கி தந்தோம். சுடிதார் பேன்ட் கயிறின் இறுக்கத்தைகூட தாங்க முடியாதவள், எப்படி தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி தாங்கி கொண்டாளோ" என்று குமுறி சொல்கிறார்.

   
   
   
  English summary
  Chennai IIT Student Death: fatima latifs mother says that, "she does not even know how to tie a sudidar pant rope also"
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X