திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தங்க கடத்தல்: சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்கட்சிகள் - சந்திக்க தயாரான பினராயி விஜயன்

தங்கக் கடத்தல் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கோரிக்கை வைத்துள்ளார். எந்த விசாரண

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பரவலையும் தாண்டி கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கு. தங்கக்கடத்தலில் சிக்கிய ஸ்வப்னாவிற்கும் முதல்வர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஐஏஎஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவரவே காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் சூட்டைக் கிளப்பி வருகின்றனர். சிபிஐ விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் எதையும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார் பினராயி விஜயன்.

கேரளா அரசியலில் இன்னமும் எதுவும் நடக்கலையே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த எதிர்கட்சியினருக்கு சுவைப்பதற்கு சூடான அல்வா கிடைத்து விட்டது தங்கக் கடத்தல் வழக்கு. கடந்த ஜூலை 4 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஜரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரிய வந்தது. ஸ்வப்னா கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரள அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா தங்க கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை பற்ற வைத்தது.

தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி? தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி?

சந்திக்க தயாரான பினராயி விஜயன்

சந்திக்க தயாரான பினராயி விஜயன்

தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

 ரமேஷ் சென்னிதலா

ரமேஷ் சென்னிதலா

முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரியாமல் இந்த விவகாரம் நடந்திருக்காது. இந்தக் கடத்தலுக்கு முதல்வர் அலுவலகம் உதவியுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் பெரிய கிரிமினல் கூட்டம் செயல்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனும் தன்னுடைய அலுவலகத்தில் எவ்வாறு இதுபோன்ற நபர்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டார்கள் என்று விளக்க வேண்டும் என சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

ஸ்வப்னா தலைமறைவு

ஸ்வப்னா தலைமறைவு

ஜரீத் உடன் கூட்டணி வைத்து தங்கம் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் திடீரென்று தலைமறைவாகியுள்ளார். ஸ்வப்னாவை தேடும் பணி தீவிரமடைந்துள்து.அவர் தமிழ் நாட்டிற்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று கூறப்படுவதால் கேரளா போலீசார் தமிழ்நாட்டிற்கு விசாரணைக்கு வர உள்ளனர்.

சந்திக்க தயார்

சந்திக்க தயார்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்றும், இதில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை என்றும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்றும், இதில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை என்றும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

உண்மைகள் தெரியவரும்

உண்மைகள் தெரியவரும்

தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கடத்தலில் தேடப்பட்டுவரும் பெண் எவ்வாறு பணி அமர்த்தப்பட்டார் என எனக்குத் தெரியாது. விசாரணை நடந்து வருகிறது. அதில் உண்மைகள் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கி இருப்பதாக, டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தெரிவித்துள்ளது.

English summary
Gold Smuggling case has triggered a huge political row in the state amid fight against coronavirus. Opposition Leader Ramesh Chennithala has sought a CBI probe in the smuggling case. In a letter to Prime Minister Narendra Modi on Tuesday, Chief Minister Pinarayi Vijayan has denied allegations he has said ready to face.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X