திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: டேபிள்டாப் ரன்வேயான கரிப்பூர் விமான நிலையத்தில் இதுவரை 27 முறை பல்வேறு விமானங்களை பாதுகாப்பாக லேண்டிங் செய்துள்ளார் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புகழாரம் சூட்டியுள்ளார்.

Recommended Video

    Kerala விமான விபத்தில் பலியான Pilot Deepak Sathe யார் தெரியுமா? | Oneindia Tamil

    கரிப்பூர் விமான நிலையம் டேபிள்டாப் எனப்படும் மலை பகுதியில் வைக்கப்பட்ட ரன்வேயை கொண்டதாகும். இங்கு விமானத்தை டேர் ஆஃப் செய்வதற்கும் லேண்டிங் செய்வதற்கும் கைதேர்ந்த விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம் கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்

    விமானம்

    விமானம்

    இந்த நிலையில் நேற்றைய தினம் துபாயிலிருந்து வந்த விமானம் தரையிறங்கிய போது எதிர்பாராதவிதமாக மழையால் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகிவிட்டனர். விமானத்தை இயக்கிய விமானி தீபக் வசந்த் சாத்தே, துணை விமானி அகிலேஷ் உள்ளிட்டோர் இறந்துவிட்டனர்.

    நிவாரணம் அறிவிப்பு

    நிவாரணம் அறிவிப்பு

    இந்த நிலையில் சம்பவ இடத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பார்வையிட்டார். அப்போது அவர் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். அத்துடன் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சமும் லேசான காயத்திற்கு ரூ 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

    தீப்பிடித்து எரியவில்லை

    தீப்பிடித்து எரியவில்லை

    அவர் மேலும் கூறுகையில் கோழிக்கோடு விமான விபத்து வேதனை அளிக்கிறது. இதில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மங்களூர் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தை போல் கோழிக்கோடு விமானம் தீப்பிடித்து எரியவில்லை. அவ்வாறு தீப்பிடித்திருந்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும். எனவே தீப்பிடிக்காதது நமது அதிர்ஷ்டம்.

    விமானி தீபக்

    விமானி தீபக்

    இங்கு உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், கமாண்டர்களால் இயக்கப்படுகிறது. இது போல் கோழிக்கோடு விமான விபத்துக்குள்ளான விமானம் மிகவும் அனுபவம் வாய்ந்த தீபக் வசந்த் சாத்தேவால் இயக்கப்பட்டது. இந்த டேபிள்டாப் விமான ரன்வேயில் இந்த ஆண்டு உள்பட இதுவரை 27 முறை விமானத்தை தரையிறக்கியிருந்தார் விமானி தீபக் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Civl Aviation Minister Hardeep Singh Puri says that he had landed on this airfield for 27 times.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X