திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எண்ட ஸ்டேட் கேரளா.. எண்ட மீசிக் கதகளி.. பார் முழு சேட்டனாக மாறிய ராகுலை பார்!

வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மலையாள டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மலையாளம் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய ராகுல் காந்தி- வீடியோ

    திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மலையாள டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. கேரள மக்கள் பலர் இவரது டிவிட்டிற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

    கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

    இந்த நிலையில் கேரளாவில் விரைவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராகுல் காந்தி கேரளா புத்தாண்டு பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    குடும்ப அரசியல் வேண்டாம்.. என் மகனுக்கு சீட் கிடைச்சாச்சு.. பதவி விலகிய மத்திய அமைச்சர்.. சபாஷ்!குடும்ப அரசியல் வேண்டாம்.. என் மகனுக்கு சீட் கிடைச்சாச்சு.. பதவி விலகிய மத்திய அமைச்சர்.. சபாஷ்!

    என்ன டிவிட்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் இன்று கொண்டாடப்படும் புத்தாண்டு பண்டிகையான விஷு பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். எல்லோருக்கும் வளமும், மகிழ்ச்சியும், நிறைவும் நிறைந்த கேரள புத்தாண்டு தின வாழ்த்துகள் என்று அவர் மலையாளத்தில் புகைப்படத்துடன் டிவிட் செய்து உள்ளார்.

    நல்லது

    நல்லது

    இதை அவர் முழுக்க முழுக்க மலையாளத்தில் டிவிட் செய்துள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி ''எண்டே ஸ்டேட் கேரளம்'' என்ற அளவிற்கு இறங்கிவிட்டார் என்று எல்லோரும் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். மலையாளிகள் பலர் சந்தோச மிகுதியில் அவருக்கு நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.

    தமிழ் புத்தாண்டு

    அதே சமயம் இவர் தமிழ் புத்தாண்டிற்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ''தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும்.'' என்று இவர் தமிழில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    திமுக கட்சி

    திமுக கட்சி

    ஆனால் திமுக கட்சியினர் யாரும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை. பெரும்பாலான தமிழ் அறிஞர்களின் கருத்துப்படி தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பதால் திமுகவினர் இதை கொண்டாடவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Mallu Man: Congress Chief Rahul Gandhi's tweet in Malayalam for Vishu becomes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X