திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் அதிர்ச்சியில் காங்கிரஸ்.. கேரளாவில் மலை போல நம்பி இருந்த டாம் வடக்கன் பாஜகவிற்கு தாவல்!

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் தற்போது பாஜகவில் இணைந்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் தற்போது பாஜகவில் இணைந்து இருக்கிறார்.

கேரளா காங்கிரசில் மிக முக்கியமான தலைவர்களில் டாம் வடக்கனும் ஒருவர். இவர் கேரளாவில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய குரலாக திகழ்ந்து வந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இவர் நெருக்கமான நபரும் கூட.

Congress spokesperson Tom Vadakkan joins BJP

இவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் சார்பாக கேரளாவில் போட்டியிடுவார் என்றும் கருதப்பட்டது. ஆனால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இவர் கடந்த 20 வருடமாக இருந்தார். கேரளாவில் காங்கிரசின் முகமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் இவர். தற்போது இவர் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

Congress spokesperson Tom Vadakkan joins BJP

புல்வாமா தாக்குதலும், அதன்பின் இந்திய ராணுவம் குறித்து காங்கிரஸ் கட்சி பேசியதும் தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டது. அதனால் பாஜகவில் இணைந்துள்ளேன்.

இடைத் தேர்தலிலும் நிற்கிறோம்.. 18 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி இடைத் தேர்தலிலும் நிற்கிறோம்.. 18 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி

என்னுடைய பேச்சை கட்சியில் யாரும் கேட்கவில்லை. இது குடும்ப கட்சியாக மாறி வருகிறது என்று டாம் வடக்கன் தனது கட்சி மாற்றம் குறித்து கருத்து கூறியுள்ளார்.

இவர் நேற்று வரை கூட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் டிவிட்களை ஷேர் செய்து கொண்டு இருந்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்து பாஜகவில் இணைந்துள்ளார்.

English summary
As a new twist, Congress spokesperson Tom Vadakkan quits his party and joins BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X