திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொதல்ல எல்லோருக்கும் காசு கொடுங்க.. பொருளாதாரம் மோசமாகி வருது.. மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை

நிதி ஒதுக்க வேண்டும் என்று கேரள நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: எங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கியதே 230 கோடி ரூபாய்தான்.. ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பினை போக்கவும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் எங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ் ஐசக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    கொரோனா தடுப்பு நடவடிக்கை... உலக நாடுகளை வியக்க வைத்த கேரளா

    கேரளாவின் சுகாதார உள்கட்டமைப்பு மற்ற மாநிலங்களைவிட மிக மிக வலுவாகவே உள்ளது... நாட்டில் கொரோனா பாதித்த மாநிலங்களில் 2வது இடத்தில் இருந்த கேரளம் இன்று பின்தள்ளப்பட்டு விட்டது.. வைரஸ் இல்லாத முதல் இந்திய மாநிலமாக கேரளா விரைவில் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி விரைவாக செயல்பட்டதால் இந்த நிலையை எட்ட முடிந்ததாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் சுட்டிக்காட்டியும் இருந்தார்.

    கொரோனா.. ஒரே நல்ல செய்தி.. 2 நாட்களாக வேகம் காட்டும் தமிழகம்.. இதுதான் இப்போது மிக முக்கிய தேவை! கொரோனா.. ஒரே நல்ல செய்தி.. 2 நாட்களாக வேகம் காட்டும் தமிழகம்.. இதுதான் இப்போது மிக முக்கிய தேவை!

    ஐசக் கருத்து

    ஐசக் கருத்து

    "கடந்த ஒரு வாரமாக செயலில் உள்ள கேஸ்கள் குறைந்துவிட்டன... பாதிப்பில் இருநது மீட்கப்பட்ட கேஸ்கள் (பச்சை நிறம்), விரைவில் மஞ்சள் நிறத்தை கடக்கும், என்றும் ஐசக் பதிவிட்டிருந்தார். அதாவது விரைவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை குறிக்கவே பச்சை நிறத்தை ஐசக் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. இந்த சமயத்தில் ஐசக் மேலும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

    ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    தங்களுக்கு இப்போதைய தேவை பாராட்டைவிட நிதிதான் என்பதே அவரது ஒரே வேண்டுகோளாக உள்ளது. "இப்போதே காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடனும் உடனடியாக வீடியோ கான்ஃபெரன்ஸ் கூட்டத்தை நடத்த வேண்டும்... ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிக பணம் கடன் வாங்கி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்... காரணம் ஊரகப் பொருளாதாரம் மோசமாகி வருகிறது. இப்படியே போனால் பெரும் சீரழிவை சந்திக்க நேரிடும். அதை சரி செய்ய வேண்டி உள்ளது.

    வைரஸ் பரவல்

    வைரஸ் பரவல்

    தங்களுக்கு இப்போதைய தேவை பாராட்டைவிட நிதிதான் என்பதே அவரது ஒரே வேண்டுகோளாக உள்ளது. "இப்போதே காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடனும் உடனடியாக வீடியோ கான்ஃபெரன்ஸ் கூட்டத்தை நடத்த வேண்டும்... ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிக பணம் கடன் வாங்கி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்... காரணம் ஊரகப் பொருளாதாரம் மோசமாகி வருகிறது. இப்படியே போனால் பெரும் சீரழிவை சந்திக்க நேரிடும். அதை சரி செய்ய வேண்டி உள்ளது.

    வைரஸ் பரவல்

    வைரஸ் பரவல்

    மே 3-ம் தேதி வரை லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. தங்கள் மாநிலத்தில் ஊரடங்கினை தளர்த்தவும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் செய்துள்ள பணிகளை பாராட்டுவதை விட நிதிதான் தேவைப்படுகிறது. தங்களுக்கு கிடைத்தது வெறும் 230 கோடி ரூபாய்.. இப்போது வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.. இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்" என்றார்.

    நோயாளிகள்

    நோயாளிகள்

    லாக்டவுன் நீட்டிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா சொல்லும்போது, "கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை மாநிலத்தில் தொடரவே செய்யும்.. அண்டை மாநிலங்களில் இன்னும் பாதிப்பு குறையவில்லை என்பதால் கட்டுப்பாடுகளை நாங்கள் தளர்த்த போவதில்லை. சிங்கப்பூரில் இப்படித்தான். பாதிப்பு குறைந்ததும் தளர்த்தினார்கள். தற்போது மீண்டும் அதிகரித்து விட்டது. எனவே நாங்கள் கவனமாக இருப்போம். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதுதான் எங்கள் ஒரே இலக்கு" என்றார்.

    English summary
    coroanvirus: we need more money than appreciation, says kerala finance minister Thomas Isaac
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X