திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இருந்து ஆசையாக பார்க்க வந்த கணவன்... கொரோனா பீதியில் வீதியில் நிறுத்திய மனைவி

அமெரிக்காவில் இருந்து ஆசையாக பார்க்க வந்த கணவனை வீட்டிற்குள் விடாமல் வீதியிலேயே நிறுத்தி கெஞ்ச வைத்திருக்கிறார் ஒரு பெண். கேரளாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கதவை தெற நான் வீட்டுக்குள்ள வறேன்...கேட்டை மட்டுமாவது திற நான் வீட்டுக்குள் வந்துடறேன் என்று கெஞ்சுகிறார் ஒரு ஆண்...வீட்டிற்குள் இருந்து எந்த சத்தத்தையும் காணோம். பலமுறை கதவை தட்டியும், கெஞ்சாக கெஞ்சியும் வீட்டிற்குள் இருந்து பதிலே இல்லை. இந்த சம்பவம் நடந்தது கேரளா மாநிலம் வெள்ளிமலை பகுதியில்.

வீதியில் நின்று மனைவியை கதவைத் திறக்கச் சொல்லி கெஞ்சிய நபரின் பெயர் பாஸ்கரன். மதுரையைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். மனைவியின் ஊர் வெள்ளிமலை. அங்கே வீடு கட்டி குடும்பத்தோடு இருக்கிறார்கள்.

கொரோனா அச்சம் நிலவும் இந்த காலத்தில் யாரை நம்பியும் வீட்டிற்குள் விடுவதற்குக் கூட யோசனையாக இருக்கிறது. அதற்காக வெளிநாட்டில் இருந்து ஆசையாக மனைவி குழந்தைகளை பார்க்க வந்த கணவனைக்கூட வீதியில் நிறுத்திவிட்டார் அந்த பிடிவாதக்கார பெண்.

ஆம்புலன்ஸ் தர மறுப்பு.. இறந்த குழந்தையின் உடலை தோளில் சுமந்து சைக்கிளில் எடுத்துச் சென்ற தாய்மாமா!ஆம்புலன்ஸ் தர மறுப்பு.. இறந்த குழந்தையின் உடலை தோளில் சுமந்து சைக்கிளில் எடுத்துச் சென்ற தாய்மாமா!

கொரோனாவை தாண்டி வந்த நபர்

கொரோனாவை தாண்டி வந்த நபர்

மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இந்த கொரோனா காலத்திலும் பல கட்ட சோதனைகளைத் தாண்டி கேரளாவில் உள்ள தனது மனைவி குழந்தைகளைப் பார்ப்பதற்காக கேரளா சென்றிருக்கிறார். தன்னைப்பார்த்த உடன் மனைவி ஓடி வந்து அணைத்துக்கொள்வார் என்று நினைத்த பாஸ்கரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அடைக்கப்பட்டிருந்த கேட் கூட திறக்கவில்லை.

தட்டி தட்டி வலித்த கைகள்

தட்டி தட்டி வலித்த கைகள்

வீட்டு வாசலில் நின்று கொண்டு கேட்டின் கதவுகளை தட்டினார். சத்தம் போட்டு கூப்பிட்டு வீட்டின் கதவை திறக்க கூறினார் பாஸ்கரன். அவரது மனைவி கதவை திறக்கவில்லை. கணவருக்கு கொரோனா இருந்தாலும் இருக்கும் என்ற பயத்தில் வீட்டை விட்டே வெளியே வராமல் கதவை பூட்டிக்கொண்டார் அந்த பெண்.

கால் கடுக்க காத்திருப்பு

கால் கடுக்க காத்திருப்பு

தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர்தான் ஊருக்கு வந்திருக்கிறேன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஸ்கரன் விளக்கம் அளித்தும், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் பலமணி நேரம் வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்தார் பாஸ்கரன். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பரிதாப்பட்டு அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

மனைவி பிடிவாதம்

மனைவி பிடிவாதம்

பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் பாஸ்கரனின் மனைவியிடம் செல்போனில் அழைத்து கணவரை வீட்டிற்குள் விடுமாறு கேட்டும் அதற்கு மறுத்து விட்டார் அந்தப்பெண். கொரோனா காலத்தில் யாரையும் அனுமதிக்க முடியாது என்று ஒரேடியாக கூறிவிட்டார் அந்தப்பெண்.

காரை மட்டுமாவது கொடு

காரை மட்டுமாவது கொடு

வீட்டில் இருக்கும் காரை மட்டும் கொடு நான் மதுரைக்கு போய் விடுகிறேன் என்று கத்தியும் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அந்த முரட்டு பிடிவாதக்கார பெண். இதனால் பொறுமை இழந்த பாஸ்கரன் கேட்டின் பூட்டை உடைத்தார். காரை எடுத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்பி போனார். கொரோனா பீதியால் சொந்த கணவனையே வீதியில் நிறுத்திய வீடியோ காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

    சீனாவில் தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம் | Clean Plate Campaign

    English summary
    Corona fear it is even an idea to let anyone who trusts into the house. A Kerala woman even stopped her husband, who had come from abroad to visit his wife and children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X