திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை!

கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக அம்மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் தோல்வி அடைந்து வருகிறது.

Recommended Video

    ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஏன் ஆபத்தானது?

    இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்து கர்நாடகாவில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளா நிலை

    கேரளா நிலை

    கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 202ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனாவிற்கு எதிராக அம்மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் தோல்வி அடைந்து வருகிறது.

    கேரளா சொஸ்தனை

    கேரளா சொஸ்தனை

    ஆனால் இந்தியாவில் கொரோனா சோதனைகளை அதிகம் செய்த மாநிலம் கேரளாதான். இதுவும் கூட அங்கு அதிக கொரோனா நோயாளிகள் இருப்பதற்கு காரணம் ஆகும். அங்கு மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர்.இந்தியாவில் கொரோனா சோதனையில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்கள்

    பாதிக்கப்பட்டவர்கள்

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக காசர்கோட்டில்தான் 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமான இன்று மட்டும் கண்ணூரில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காசர்கோட்டில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காசர்கோடு நிலை என்ன

    காசர்கோடு நிலை என்ன

    திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரத்தில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதில் 18 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 2 பேர் அவர்கள் உடன் தொடர்பு கொண்டு, அதன் மூலம் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானார்கள். கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த 202 பேரில் ஒருவர் பலியாகிவிட்டார். 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். மீதம் 181 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

    English summary
    Coronavirus: 20 people in a single day, So far 202 people affected in Kerala state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X