திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி கவனமாக இருக்க வேண்டும்.. கொரோனா வார்டில் அடுத்தடுத்து 5 பூனைகள் பலி.. கேரளாவில் பகீர்.. குழப்பம்

கேரளாவில் கொரோனா வார்டு ஒன்றில் இருந்த 5 பூனைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வார்டு ஒன்றில் இருந்த 5 பூனைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    பெண் புலிக்கு கொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் நடந்த அதிச்சி சம்பவம் - வீடியோ

    கேரளாவில் கொரோனா ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு 357 பேருக்கு கொரோனா உள்ளது. அதில் காசர்கோட்டில் மட்டும் மொத்தம் 161 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. கொரோனா காரணமாக அங்கு மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக காசர்கோடு மாறி உள்ளது.

    கேரளா முழுக்க கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் காசர்கோட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் காசர்கோட்டில் கொரோனா வார்டில் பூனைகள் பலியான சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

    கஷ்டம்.. அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா.. இதுதான் ஒரே வழி.. டெஸ்டிங் விதிமுறையை மாற்றிய மத்திய அரசு!கஷ்டம்.. அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா.. இதுதான் ஒரே வழி.. டெஸ்டிங் விதிமுறையை மாற்றிய மத்திய அரசு!

    அதிர்ச்சி சம்பவம்

    அதிர்ச்சி சம்பவம்

    அங்கு இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு முதல் பூனை கடந்த மார்ச் 28ம் தேதி பலியானது. அதன்பின் வரிசையாக 4 பூனைகள் பலியானது. மொத்தமாக அடுத்தடுத்த நாட்களில் இரண்டு ஆண் பூனை, இரண்டு குட்டி பூனை, ஒரு பெண் பூனை பலியாகி உள்ளது. இந்த பூனைகள் கொரோனா வார்டில் சுற்றி திரிந்துள்ளது.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    அதன்பின் பாதுகாப்பிற்காக வெளியே எடுத்து செல்லப்பட்டு அருகிலேயே காசர்கோட்டில் உள்ள விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட ஒரே நாளில் இந்த பூனைகள் பலியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த பூனைகளின் உறுப்புகள் சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இதன் உடல் உறுப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது.

    பெரிய குழப்பம்

    பெரிய குழப்பம்

    இதுவரை இந்த பூனைகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. முதற்கட்ட சோதனையில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் இரண்டாம் கட்ட சோதனைக்காக தற்போது திருவனந்தபுரம் அனுப்பி உள்ளனர். இந்த சோதனையின் முடிவில் உண்மை தெரிய வரும். முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இல்லையென்றால் இதை சோதனைக்காக புனே அனுப்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். போதிய காற்று வசதி இன்றி இந்த பூனைகள் பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேசமயம் மன அழுத்தம் காரணமாகவும் பலியாகி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக எந்த விதமான தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

    விலங்குகள்

    விலங்குகள்

    ஆனால் ஏற்கனவே அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. சில நாடுகளில் நாய்களுக்கு கொரோனா வைரஸ் அவர்களின் முதலாளிகள் மூலம் பரவியது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மனிதர்களிடம் தனி மனித விலகலை கடைபிடிப்பது போல, சில நாட்களுக்கு விலங்குகளிடமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

    English summary
    Coronavirus: 5 Stray cats died in COVID-19 ward in Kerala creates fear among people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X