திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்!

கொரோனா பாதித்த ஒருவருக்கு எச்ஐவி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதித்த ஒருவருக்கு எச்ஐவி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்து இருப்பது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    இந்திய மக்களுக்கு இலக்கியா தரும் செய்தி

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் எல்லாம் திணறி வருகிறது. கொரோனா இத்தனை வீரியமாக பரவ காரணம், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.

    கொரோனாவை தற்போது மருந்து கொடுத்து நேரடியாக குணப்படுத்த முடியவில்லை. மாறாக அதன் பக்க விளைவுகளை குணப்படுத்தி, கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதன் மூலம்தான் உலகம் முழுக்க மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள்.

    கொரோனா வைரஸை இனி சீனா வைரஸ்ன்னு சொன்னீங்கன்னா.. சீனா தூதர் கோபத்துடன் அளித்த விளக்கம் கொரோனா வைரஸை இனி சீனா வைரஸ்ன்னு சொன்னீங்கன்னா.. சீனா தூதர் கோபத்துடன் அளித்த விளக்கம்

    மருந்து கொடுக்கிறார்கள்

    மருந்து கொடுக்கிறார்கள்

    கொரோனாவிற்காக இந்தியாவில் குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இரண்டும் மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து ஆகும். மலேரியா மற்றும் கொரோனா இரண்டும் ஒரே மாதிரி செயல்படும் பண்பு கொண்டுள்ளது. அதனால் கொரோனாவிற்கும் குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    எச்ஐவி எப்படி

    எச்ஐவி எப்படி

    அதேபோல் சில நாடுகளில் எபோலாவிற்கு அளிக்கப்படும் மருந்துகளும் கொரோனாவிற்கு அளிக்கப்படுகிறது. வெகு சில நாடுகளில் எச்ஐவிக்கு அளிக்கப்படும் மருந்துகளும் கொரோனாவிற்கு கொடுக்கப்படுகிறது. லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் ஆகிய மருந்துகளின் கலவை சில நாடுகளில் கொரோனாவிற்கு அளிக்கப்படுகிறது. தற்போது கேரளாவிலும் லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் மருந்துகள் கொரோனாவிற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளது.

    லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் என்றால் என்ன

    லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் என்றால் என்ன

    லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் என்பது எச்ஐவியை தடுக்க கூடிய அல்லது கட்டுப்படுத்த கூடிய மருந்து ஆகும்.எச்ஐவி வந்தால் உடலில் உள்ள, எதிர்ப்பு சக்தி மொத்தமாக குறையும். லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் இரண்டும் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த உதவும். கொரோனாவும் இதேபோல்தான் செயல்படுகிறது. அதனால் அதற்கு எதிராகவும் லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர்வை பயன்படுத்தி வருகிறார்கள்.

    கேரளா எப்படி

    கேரளா எப்படி

    இந்த நிலையில் கேரளாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட லண்டன் நபருக்கு லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் அளிக்கப்பட்டுள்ளது. இவர் எர்ணாகுளம் மெடிக்கல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு கடந்த 23ம் தேதி லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் அளிக்கப்பட்டது. கேரளா சுகாதாரத்துறை அனுமதியோடு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது.

    வெற்றி வெற்றி

    வெற்றி வெற்றி

    இந்த நிலையில் நேற்று இரவு வந்த ரிசல்ட்டின்படி, அந்த லண்டன் நபருக்கு கொரோனா இல்லை என்று உறுதியாகி உள்ளது. லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் கொடுத்த பின் அந்த லண்டன் இளைஞருக்கு கொரோனா குணமாகி உள்ளது. கேரளாவில் இது மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. மேலும் சில நபர்களுக்கு இதே போல் லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் கொடுக்க அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

    English summary
    Coronavirus: A man treated with 2 HIV drugs resulted in negative in Kerala in just 3 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X