திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் 'சி'யை கையில் எடுத்த சைலஜா..

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் 'சி'யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறீர்கள்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் 'சி'யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    கொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்

    கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் சீனாவில் இருந்து வந்தவர்கள்.

    இவர்கள் மூன்று பேரும் தீவிரமாக சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன்பின் இவர்கள் மூன்று பேருமே குணப்படுத்தப்பட்டனர்.

    மதுரையில் அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது?.. புதிர்.. ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்.. பின்னணி! மதுரையில் அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது?.. புதிர்.. ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்.. பின்னணி!

    பிளான் ஏ என்றால் என்ன

    பிளான் ஏ என்றால் என்ன

    கேரளாவில் இப்படி மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்ட போதே அங்கு பிளான் ஏ கொண்டு வரப்பட்டது. நிப்பா வைரஸ் மூலம் ஏற்பட்ட அனுபவம் காரணமாக அங்கு பிளான் ஏ கொண்டு வரப்பட்டது. அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநிலத்தின் பல பகுதிகளில் 50 அரசு மருத்துவமனைகள், இரண்டு தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதேபோல் 974 பெட்கள் தயார் செய்யப்பட்டது. 242 கூடுதல் பெட்கள் தயார் செய்யப்பட்டது.

    பிளான் பி

    பிளான் பி

    அதன்பின் கேரளாவில் மீண்டும் கொரோனா தோன்றியது. கேரளாவில் மொத்தம் 3 பேருக்கு பத்தினம்திட்டாவில் கொரோனா தோன்றியது. இதனால் உடனடியாக பிளானை பியை கையில் எடுத்தது கேரளா. கேரளாவில் இந்த பத்தினம்திட்டாம் குடும்பம் சந்தித்த எல்லோரையும் கண்டுபிடிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. அதேபோல் கூடுதலாக 71 அரசு மருத்துவமனைகள், 55 தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதேபோல் மொத்தமாக 1408 பெட்கள் தயார் செய்யப்பட்டது. 17 கூடுதல் பெட்கள் எதிர்கால தேவைக்காக தயார் செய்யப்பட்டது.

    இதுவரை செயல்படவில்லை

    இதுவரை செயல்படவில்லை

    ஆனால் இதுவரை கேரளாவில் பிளான் ஏ மட்டும்தான் செயல்பாட்டில் இருக்கிறது. பிளான் ஏ மூலம் 974 பெட்கள் தயார் செய்யப்பட்டது. 242 கூடுதல் பெட்கள் தயார் செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 92 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது. அங்கு 60000 பேரை வரை வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நோயாளிகள் எண்ணிக்கை 1000ஐ தொட வாய்ப்பில்லை என்பதால் பிளான் ஏவை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது.

    நேற்று என்ன நிலை

    நேற்று என்ன நிலை

    ஆனால் கடந்த மூன்று நாட்கள் நிலை அம்மாநில அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன்படி கேரளாவில் மூன்று நாட்களுக்கு முன் 21 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன் 20 கொரோனா வைரஸ் பரவியது. கடைசியாக நேற்று 23 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதனால் அங்கு கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிளான் சி என்றால் என்ன?

    பிளான் சி என்றால் என்ன?

    இது ஸ்டேஜ் 3 ஆக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரு முறை ஸ்டேஜ் 3 ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது கடினம். இதனால் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பிளான் 'சி'யை கையில் எடுத்துள்ளார். இதற்காக அங்கு புதிய பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் சி என்பது மோசமான நிலையை சமாளிக்க உதவும். இதற்காக கூடுதல் மருத்துவமனைகள் அமைக்கப்படும். கூடுதல் பெட்கள் தயார் செய்யப்படும்.

    இதுதான் திட்டம்

    இதுதான் திட்டம்

    பிளான் சி மூலம் 3,028 பெட்கள் உருவாக்கப்படும். கூடுதலாக 122 மருத்துவமனைகளை தயார் செய்வார்கள். 81 அரசு மருத்துவமனைகள், 41 தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனைகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்கள், பயன்படுத்தப்படாத கட்டிடங்களை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    தயார் நிலை

    தயார் நிலை

    218 ஐசியூக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் சியை கையில் எடுத்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கேரளா நம்புகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் சைலஜா முடுக்கிவிட்டு இருக்கிறார். விரைவில் அங்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும், நோயாளிகள் குணம் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Coronavirus: After 28 patients in a single day, Kerala thinks to go for Plan C in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X