திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திணறும் சீனா.. சாதித்த கேரளா.. கொரோனாவை மொத்தமாக கட்டுப்படுத்தியது.. 3 பேரும் குணமான அதிசயம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கேரளா மாணவர் ?| First Indian who tested positive for Corona virus now

    திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரும் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடைசியாக நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது.

    சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. இது உலகம் முழுக்க 22 நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தோன்றி மூன்று மாதம் ஆகியும் இதன் வேகம் குறையவில்லை.

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1770 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 71000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    சீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு சீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    கடந்த மாதம் இந்த வைரஸ் கேரளாவிலும் பரவியது. கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பார்வையது.முதலில் கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இன்னொரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் கேரளாவில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு இளைஞருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 2239 பரிசோதனை செய்யப்பட்டு வந்தனர்.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    திருச்சூரில்தான் இந்த வைரஸ் தாக்குதல் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அங்கு 84 பேர் மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இவர்கள் தனி அறையில் தீவிரமாக சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கப்பட்டது. இவர்களை தனியாக வைத்து மிக கடுமையாக சோதனைகளை செய்தனர்.
    அங்கு நோய் தாக்கிய மூன்று பேரில் 2 பேர் திருச்சூரை சேர்ந்தவர்கள்.

    முடிந்தது

    முடிந்தது

    இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரும் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடைசியாக் நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதில் இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஒருவர் மட்டும் அடுத்த 10 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பார். அதன்பின் அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்படி

    எப்படி

    இந்த மூன்று பேருமே கேரளாவில் இருந்து வுஹன் நகரத்திற்கு மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி செய்ய சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் இவர்கள் மூவருக்கும் உள்ள ஒற்றுமை. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நோயாளி இறக்காமல் 14 நாட்கள் பார்த்துக் கொண்டு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தால் , இந்த வைரஸை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.

    சூடு வெய்யில்

    சூடு வெய்யில்

    அதேபோல் சூடு, மற்றும் வெய்யில் என்றால் இந்த கோவிட் 19க்கு ஆகாது. இதனால்தான் இந்தியாவில் இந்த வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை. தற்போது கேரளாவிலும் வைரஸ் பரவிய மூன்று பேரும் இதேபோல் தொடர் சிகிச்சை மூலமே குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அங்கு புதிதாக யாரும் வைரஸ் தாக்குதலோடு அனுமதியாகவில்லை. இதனால் அங்கு மார்ச் இறுதியில் முற்றிலுமாக கொரோனா வைரஸ் இல்லாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: All three patients from Kerala tests negative finally, Two discharged so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X