திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் நிஃபா வைரஸை விரட்டி அடித்த அதே கே.கே சைலஜா.. கொரோனாவிற்கு எதிராக களமிறங்கினார்.. வியூகம்!

கேரளாவில் நிஃபா வைரஸை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாக விரட்டி அடித்த சுகாதாரத்துறை தற்போது கொரோனா வைரஸை எதிர்கொண்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் | Coronavirus attack in Kerala

    திருவனந்தபுரம்: கேரளாவில் நிஃபா வைரஸை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாக விரட்டி அடித்த சுகாதாரத்துறை தற்போது கொரோனா வைரஸை எதிர்கொண்டுள்ளது. இதற்காக கடந்த முறை போல இந்த முறையும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா களமிறங்கி உள்ளார்.

    உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 304 பேர் பலியாகி உள்ளனர். 14000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

    நிஃபா வைரஸ் எப்படி

    நிஃபா வைரஸ் எப்படி

    கேரளாவில் தற்போது வந்திருக்கும் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட அங்கு பரவிய நிஃபா வைரஸ் போன்றதாகும். கேரளாவில் பரவி வந்த நிஃபா வைரஸ் காரணமாக, அங்கு மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு மாதத்தில் மொத்தமாக 17 பேர் இறந்து பலியானார். இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வந்தனர். சாதாரண நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேரும் எல்லோருக்கும், இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது.

    மூளையை

    மூளையை

    இந்த வைரஸ் இதயம், மூளையை பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் தாக்குதலை மிகுந்த சிரமத்திற்கு பின் கேரளா கட்டுப்படுத்தியது. மிக கடுமையான சோதனைகள், கட்டுப்பாடுகள், சிகிச்சைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலை அம்மாநில அரசு கட்டுப்படுத்தியது. இதற்காக கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா கடுமையான திட்டங்களை வகுத்து, மிகவும் திறமையாக செயல்பட்டார். இவரின் செயல் நாடு முழுக்க பாராட்டப்பட்டது.

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி எல்லா வைரஸ் போலவே சாதாரண காய்ச்சலில் இருந்தே தொடங்கும். ஆனால் இந்த சாதாரண காய்ச்சல் உடனடியாக பெரிதாகும். முக்கியமாக மூச்சு விடும் பிரச்சனை இருக்கும். ரத்த கொதிப்பு மொத்தமாக குறையும். என்ன விதமான சிகிச்சை அளித்தாலும் மரணம் அடையும் வரை இந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இது கிட்டத்தட்ட அப்படியே கொரோனா வைரஸ் போன்றதுதான். இரண்டின் தீவிரமும் ஏறத்தாழ ஒரேமாதிரியானதுதான்.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த நிஃபா வைரஸ் மனிதர்களை மட்டுமில்லாமல் விலங்குகளையும் தாக்கும். முக்கியமாக இந்த வைரஸ் முதலில் வௌவால்களை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் எதாவது பழத்தில் அமர்ந்து, அந்த பழத்தை மனிதர்கள் சாப்பிட்டு இருந்தால், இந்த வைரஸ் தாக்கி இருக்கும் என்று கூறியுள்ளார். இது எப்படி பரவுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல்தான் தற்போது கொரோனா வைரஸும் வௌவால்கள் மூலம் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

    சோதனை எப்படி

    சோதனை எப்படி

    இதனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, கேரளாவில் கே கே சைலஜா களமிறங்கி இருக்கிறார். இதற்காக தனி குழு, 5 க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து கேரளா முழுக்க சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று அதிகாலை இதற்காக 3 மணிக்கு எல்லாம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். பல்வேறு குழுக்கள் களமிறங்கி கேரளா முழுக்க சோதனை நடத்தி வருகிறது. இரண்டு நாட்களாக சைலஜா திருச்சூர் மருத்துவமனையில்தான் இருக்கிறார்.

    மீண்டும் வாருங்கள்

    மீண்டும் வாருங்கள்

    இதற்காக நிறைய தடுப்பு திட்டங்களை, வியூகங்களை அவர்களை வகுத்துள்ளனர். நிஃபா வைரஸ் காரணமாக கேரளாவில் பலர் இறக்க வேண்டியது. ஆனால் அதை கேரளா அரசு மிக சாதூர்யமாக எதிர்கொண்டது. அதை வைத்து வைரஸ் என்று படமும் எடுத்து வெளியிட்டது. படமும் ஹிட் அடித்தது வேறு கதை. இந்த நிஃபா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார மையம் கேரளாவை பாராட்டியது. தற்போது கொரோனாவிற்கு எதிராக அதே தீவிரத்துடன் கேரளா களமிறங்கி உள்ளது. இதிலும் கேரளா வெற்றிபெறும் என்று நம்பலாம்!

    English summary
    Coronavirus attacked Kerala: Minister KK Shailaja and team joined together after Nipah attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X