Delta: டெல்டா ஒருபக்கம்.. ஒமிக்ரான் மறுபக்கம்.. ஒரே வாரத்தில் 100% பாதிப்பு.. சிக்கி தவிக்கும் கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் டெல்டா, ஒமிக்ரான் என இரண்டு வகை வைரஸ்களின் தாக்கம் உள்ளதாகவும், ஒரே வாரத்தில் 100 சதவீதம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய மாநிலங்களில் ஒன்று கேரளா.. அங்கு கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இதே நாள்..21 வருடம்..3 வெற்றி..மறக்கமுடியாத நாள்...உருகிய சிம்ரன்..வாழ்த்தும் ரசிகர்கள்
கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.. மற்றொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பீதியும் சூழ்ந்து கொண்டுள்ளது.

இயற்கை சீற்றம்
ஏற்கனவே மழை, வெள்ளம் என இயற்கை பாதிப்பில் சிக்கி கொண்ட கேரளா, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளை கையில் எடுத்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதங்களில் நோரோ, ஜிகல்லா உள்பட சில வைரஸ் நோய்களும் கேரளாவில் பரவி மேலும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.. அதேபோல, ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவி அம்மக்களை நிலைகுலைய செய்துவிட்டது.

திணறல்
மற்ற பிரச்சனைகளை ஒருவழியாக சமாளித்து விட்டாலும் கொரோனாவைரஸ் தொற்றை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்ததில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.. நேற்று 5,797 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இதுவரை 52,91,280 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

உயிரிழப்பு
அதேபோல, கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 296 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஒரு லட்சத்து 28 பேர் இப்போது தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.. இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18% ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்
இந்நிலையில், அம்மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை பற்றி செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, நேற்று முன்தினம் வரை 345 ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன... 155 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இந்த அளவுக்கு தொற்று உயர்வுக்கு காரணம் டெல்டா வகையால் எண்ணிக்கை உயருவதுதான்.. டெல்டா, ஒமிக்ரான் 2 வைரஸ்களின் தாக்கமும் இருக்கின்றன.. அதனால்தான், ஒரே வாரத்தில் 100 சதவீத கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன" என்றார்.