திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டேஜ் 3 வந்துவிட்டதா என கண்டுபிடிப்பது எப்படி? இதுதான் ஒரே வழி.. பினராயி கொடுக்கும் செம ஐடியா!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தியாவில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் வந்துவிட்டதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்ற பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் நல்ல திட்டம் ஒன்றை கூறியுள்ளார்.

Recommended Video

    பெரிய டீம்... கேரளாவில் அசத்தும் சைலஜா டீச்சர்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் 25 பேர் பலியாகி உள்ளனர். இன்று மாலை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்த வார இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக அதிகரிக்கலாம். இதற்காக இந்தியாவில் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 6 போ் புதிதாக அனுமதி திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 6 போ் புதிதாக அனுமதி

    நிறைய கருத்துக்கள் நிலவுகிறது

    நிறைய கருத்துக்கள் நிலவுகிறது

    இந்த நிலையில் இந்தியாவில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. சில மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இந்தியாவில் ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள். ஸ்டேஜ் 3ன் தொடக்கம் இது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு இந்தியாவில் இன்னும் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்படவில்லை என்று கூறுகிறது.

    கஷ்டமாக இருக்கிறது

    கஷ்டமாக இருக்கிறது

    ஆனால் இன்னொரு பக்கம் நாடு முழுக்க கொரோனா பாதிப்பால் பல பேர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் பலருக்கும் வெளிநாடு சென்ற டிராவல் ஹிஸ்டரி இல்லை. அதேபோல் அவர்கள் கொரோனா பாதித்த யாரையும் சந்திக்கவில்லை. அவர்களின் வீட்டிலும் யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. முக்கியமாக கேரளாவில் பலர் இப்படி டிராவல் ஹிஸ்டரி இல்லாமல் இருக்கிறார்கள்.

    மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்

    மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்

    இவர்களுக்கு எல்லாம் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவர்கள் யார் மூலம் பாதிக்கப்பட்டார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் அரசு உறுதியாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஸ்டேஜ் 3 மூலம் பாதிக்கப்படவில்லை. ஸ்டேஜ் 3 இந்தியாவில் ஏற்படவில்லை என்று உறுதியாக கூறி வருகிறது. இது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    பினராயி கொடுக்கும் ஐடியா

    பினராயி கொடுக்கும் ஐடியா

    இதற்குத்தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் நல்ல திட்டம் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி நாடு முழுக்க கொரோனா டெஸ்டிங் வேகத்தை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக டிராவல் ஹிஸ்டரி இல்லாமல், கொரோனா அறிகுறியோடு அனுமதி ஆகும் நபர்களுக்கு முதலில் டெஸ்ட் செய்ய வேண்டும். இவர்களை முதலில் டெஸ்ட் செய்வதன் மூலம் அவர்களுக்கு கொரோனா உள்ளதா, இல்லையா என்று தெரிந்துவிடும்.

    எப்படி கண்டுபிடிப்பது

    எப்படி கண்டுபிடிப்பது

    டிராவல் ஹிஸ்டரி இல்லாமல் கொரோனா அறிகுறியோடு அனுமதி ஆகும் நபர்களுக்கு கொரோனா இல்லை என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் டிராவல் ஹிஸ்டரி இல்லாமல் அனுமதி ஆகும் பலருக்கு கொரோனா இருந்தால், அது சமூக பரவல் என்று உறுதி செய்து விடலாம். இப்படித்தான் சமூக பரவலை கண்டுபிடிக்க முடியும். இதுதான் இப்போது அவசியம் என்று கேரள முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார்.

    கேரளா முடிவு செய்துவிட்டது

    கேரளா முடிவு செய்துவிட்டது

    இதனால் தற்போது கேரளாவில் துரிதமான கொரோனா சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாக்கின் உட்பகுதியில் இருந்து எச்சில் எடுத்துதான் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக ரத்தத்தில் இருந்து கொரோனா சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் 45 நிமிடம் - 2 மணி நேரத்தில் கொரோனா சோதனைகளை செய்து முடிக்க முடியும். இது தெளிவான முடிவுகளை எடுக்க உதவும்.

    English summary
    Coronavirus: How to find stage 3 in India? KL CM Pinarayi gives a good idea on testing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X