திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய கேங்.. கேரளாவில் கடத்தல் ஆசாமிக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய டான்.. திகில் கதை!

காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 47 வயது நிரம்பிய கடத்தல் ஆசாமி ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 47 வயது நிரம்பிய கடத்தல் ஆசாமி ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    இந்தியாவில் கேரளாவில்தான் முதலில் கொரோனா தோன்றியது. அங்கு மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மூன்று பேரும் குணப்படுத்தப்பட்டனர்.

    தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் அங்கே ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது.

    காசர்கோடு

    காசர்கோடு

    கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில்தான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி இருக்கிறது. அங்கு மொத்தமாக மாவட்டம் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. தற்போது காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 1580 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் பலர் அங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடத்தல்காரர்

    கடத்தல்காரர்

    காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 47 வயது நபர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கடந்த மார்ச் 11ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலமாக கோழிக்கோடு விமான நிலையம் வந்துள்ளார். இவர் கோழிக்கோடு விமான நிலையத்தில் மட்டுமின்றி கேரளா முழுக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இடையில் அதிகம் பிரபலம் ஆனவர். காரணம் இவர் மிகவும் பிரபலமான கடத்தல்காரர்.

    துபாய் கடத்தல்

    துபாய் கடத்தல்

    துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது இவரின் வழக்கம். கடத்தல் குழுக்களுக்கு அப்பகுதியில் இவர்தான் டான் எனப்படுகிறது. இவர் மீது மூன்று முறை கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவருக்கு பின் பெரிய கேங் இயங்கி வரலாமென்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த இவர் விரிவாக சோதனை செய்யப்பட்டார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அங்கு அவருக்கு முழுமையாக போதை பொருள் சோதனை செய்யும் முன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இவர் மார்ச் 19ம் தேதி கொரோனா அறிகுறி இருக்கவே மருத்துவமனையில் சோதனை செய்தார். அதன்பின் அவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு தீவிரமாக கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். ஆனால் இவர் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிப்பது பெரிய சிக்கலாகி உள்ளது.

    பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    மார்ச் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை இவர் 2500 பேரை சந்தித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர் பாதி பேரின் பெயரை வெளியே சொல்லாமல் மறைகிறார். காரணம், இவர் சில கடத்தல் கும்பல்களை சந்தித்துள்ளார். இவர்களின் பெயரை சொன்னால் மொத்தமாக நிறைய கடத்தல் கும்பல்கள் அப்படியே போலீசிடம் சிக்கும். இவர் இரண்டு எம்எல்ஏக்களை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயரை இவர் தீவிரமாக மறைக்கிறார்கள்.

    மோசம்

    மோசம்

    தங்கள் கூட்டாளிகள், சக கடத்தல் பார்ட்னர்கள் பலரை இவர் சந்தித்துள்ளார். இரண்டு முறை ஒரே வாரத்தில் ஏர்போர்ட் சென்று பார்சல்கள் வாங்கி உள்ளார். ஆனால் அப்போதெல்லாம் இவர் யாரை பார்த்தார் என்பதை எல்லாம் வெளியே சொல்லாமல் மறைகிறார். இவருக்கு பின் இருக்கும் கேங்கில் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இவரோ, அதை வெளியே சொல்லாமல் மறைத்து வருகிறார்.

    English summary
    Coronavirus: In Kerala, a Smuggler gets an attack, Police struggles to trace contacts of him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X