திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறு அறிவிப்பு வரும்வரை.. இனி எல்லா ஞாயிறும் லாக்டவுன்தான்.. கேரள அரசு அறிவிப்பு.. பினராயி அதிரடி!

இனி அறிவிப்பு வரும் வரை கேரளாவில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் லாக்டவுன் பின்பற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இனி மறுஅறிவிப்பு வரும் வரை கேரளாவில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் லாக்டவுன் பின்பற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்திய மாநிலம் என்ற சிறப்பை கேரளா பெற்றுள்ளது. உலகம் முழுக்க கேரளாவின் இந்த செயல்பாடு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

உலக நாடுகளை அனைத்தும் கேரளாவின் செயல்பாட்டை பாராட்டி வருகிறது. பல்வேறு நாடுகள் கேரளாவின் இந்த பணியை தங்கள் நாட்டில் அமல்படுத்தவும், அவர்களின் பணியை பின்பற்றவும் முடிவு செய்துள்ளது.

வெறும் 13 நாட்கள்.. கோயம்பேடு மூலமாக இத்தனை கேஸ்களா.. அதிர வைக்கும் கொரோனா பரவல் டேட்டா!வெறும் 13 நாட்கள்.. கோயம்பேடு மூலமாக இத்தனை கேஸ்களா.. அதிர வைக்கும் கொரோனா பரவல் டேட்டா!

இன்று கேஸ்கள்

இன்று கேஸ்கள்

கேரளாவில் இன்று அபுதாபி மற்றும் துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அங்கு 484 பேர் குணப்படுத்தப்பட்டுவிட்டனர்.இதனால் அங்கு ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இதுவரை கேரளாவில் 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

குறைவான கேஸ்கள்

குறைவான கேஸ்கள்

கடந்த 8 நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு கேஸ்கள் வந்தது. இதன் மூலம் இந்தியாவில் மிக குறைவான கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் கொண்ட மாநிலம் என்ற சிறப்பை கேரளா பெற்றுள்ளது. இந்த நிலையில் இனி அறிவிப்பு வரும் வரை கேரளாவில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் லாக்டவுன் பின்பற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும், இயற்கையை, சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாகவும் இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு லாக்டவுன் பின்பற்றப்படும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளாவில் அத்தியாவசிய கடைகள், பணிகள் எப்போதும் போல செயல்படும்.

என்ன அனுமதி

என்ன அனுமதி

ஹோட்டல்களில் பார்சல் மட்டும் செயல்படும். திருமணங்கள், மரண ஊர்வலங்கள் நடக்கலாம். ஆனால் வேறு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் இயங்கும். மீடியா செயல்படும். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்ல வேண்டும் என்றால் பாஸ் அவசியம். மத நிகழ்வுகள் நடத்த முன் அனுமதி வாங்க வேண்டும், என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

English summary
Coronavirus: Kerala announces the lockdown on all Sundays till the next announcement in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X