திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சத்தமின்றி உருவான 4 ஹாட்ஸ்பாட்.. கேரளாவில் வேகமாக அதிகரிக்கும் கேஸ்கள்.. அதிர வைக்கும் பின்னணி!

கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Kerala liquor shops : ஆன்லைனில் பேமெண்ட் ப்ளஸ் டோக்கன்

    கேரளாவில் கொரோனா கேஸ்கள் மொத்தமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் அதிக அளவில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் அங்கு வரும் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    மொத்தமாக கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

    குவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்குவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்

    இன்று எத்தனை

    இன்று எத்தனை

    கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரமாக அங்கு தினமும் 30க்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. கடந்த சனிக்கிழமை அங்கு மொத்தம் 62 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இன்று கேரளாவில் வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேர் , வெளிமாநிலத்தில் இருந்து வந்த 25 பேர் உட்பட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எங்கு எல்லாம் கேஸ்கள்

    எங்கு எல்லாம் கேஸ்கள்

    கேரளாவில் இன்று காசர்கோட்டில் 14 பேருக்கும், கண்ணூரில் 10 பேருக்கும் கொரோனா ஏற்பட்டது. பாலக்காட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதேபோல் திருவனந்தபுரத்தில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் 4 பேருக்கும், ஆலப்புழாவில் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பத்தினம்திட்டாவில் 3 பேருக்கும், கொல்லம் மற்றும் கோட்டயத்தில் இருவருக்கும், இடுக்கியில் ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

    வெளிநாடு பயணிகள்

    வெளிநாடு பயணிகள்

    கேரளாவில் ஓமன், சவுதி அரேபியா, குவைத், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து வந்த நபர்கள் மூலம் அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா, தமிழ்நாடு , கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமும் கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்கு 6 பேருக்கு காண்டாக்ட் மூலம் வெளிநாடு செல்லாமலே கொரோனா வந்துள்ளது.

    மருத்துவ பணியாளர்கள்

    மருத்துவ பணியாளர்கள்

    கேரளாவில் சமீப நாட்களாக மருத்துவ பணியாளர்கள் பலருக்கு கொரோனா வருகிறது. இன்றும் இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு அங்கு கொரோனா வந்தது. அதேபோல் இரண்டு ஜெயில் கைதிகளுக்கு கொரோனா வந்தது. அங்கு புதிதாக 4 ஹாட்ஸ்பாட் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி, மலம்புழா , சல்லிசேரி, கண்ணூர் ஆகிய ஆகிய பகுதிகள் கேரளாவில் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் சத்தமே இல்லாமல் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மாறியுள்ளது.

    மொத்தம் எத்தனை கேஸ்கள்

    மொத்தம் எத்தனை கேஸ்கள்

    கேரளாவில் மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 894 ஆக உயர்ந்துள்ளது. அங்கு விரைவில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் என்கிறார்கள். அங்கு தற்போது ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 359 ஆக உள்ளது. அங்கு மொத்தம் 532 பேர் குணமாகி உள்ளனர். மொத்தம் அங்கு 6 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 99278 பேர் தற்போது தனிமை முகாமில் இருக்கிறார்கள்.

    English summary
    Coronavirus: Kerala gets 49 more cases today, 4 hotspots found in the state so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X