திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு கோயம்பேடு ஓட்டுநர்.. கேரளாவில் மளமளவென அதிகரித்த கேஸ்கள்.. திடீரென நடந்த அதிர்ச்சி திருப்பம்!

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மளமளவென்று கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மளமளவென்று கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

கேரளாவில் மொத்தமாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம். எங்கள் மாநிலத்தில் கொரோனாவை விரட்டி விட்டோம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். அங்கும் கூட ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்தது.

இதனால் கேரளாவில் மொத்தமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இனி அங்கு பாதிப்பு இருக்காது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

2வது வேவ் வந்துருச்சா.. சீனாவை முந்தி கொண்டு ஷாக் தந்த இந்தியா.. அதிரடி வேகத்தில் கொரோனா பாதிப்பு?2வது வேவ் வந்துருச்சா.. சீனாவை முந்தி கொண்டு ஷாக் தந்த இந்தியா.. அதிரடி வேகத்தில் கொரோனா பாதிப்பு?

மீண்டும் கேஸ்கள்

மீண்டும் கேஸ்கள்

ஆனால் தற்போது கேரளாவில் மீண்டும் கேஸ்கள் அதிகமாக வர தொடங்கி உள்ளது. நேற்றும் நேற்று முதல் நாளும் அங்கு கேஸ்கள் மீண்டும் வர தொடங்கி உள்ளது. நேற்று முதல் நாள் கேரளாவில் 26 பேருக்கு கொரோனா வந்தது. ஒரு வாரமாக அங்கு கொரோனா இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் 26 பேருக்கு கொரோனா வந்தது. வெளி மாநிலத்தில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு வந்தவர்கள் மூலமும் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.

எத்தனை கேஸ்கள்

எத்தனை கேஸ்கள்

அதன்படி அங்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு நேற்று முதல்நாள் கொரோனா ஏற்பட்டது. தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் கேரளாவில் தற்போது கிட்டத்தட்ட செகண்ட் வேவ் உருவாக்கி உள்ளது. அங்கு இந்த புதிய கேஸ்கள் வயநாடு, காசர்கோடு மற்றும் மலாபுரத்தில்தான் அதிகம் ஏற்படுகிறது.

நேற்று என்ன நிலை

நேற்று என்ன நிலை

இந்த நிலையில் நேற்றும் கேரளாவில் 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.வயநாட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு ஆக்டிவ் கேஸ்கள் 19 ஆக உயர்ந்துள்ளது. மலப்புரத்தில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் ஆலப்புழாவில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொல்லம், பாலக்காடு மற்றும் காசர்கோட்டில் தலா ஒருவருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு காரணம்

கோயம்பேடு காரணம்

அங்கு கொரோனா கேஸ்கள் இப்படி திடீரென அதிகரிக்க கோயம்பேடு மார்கெட் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி வயநாட்டிற்கு வந்த கேரளாவை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர் மூலம் மட்டும் அவரின் உறவினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் வயநாடு வந்து ஒரு வாரம் கழித்து மே 2ம் தேதிதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா

இவர் மூலம் இவரின் வீட்டில் இருக்கும் இவரின் மனைவி, மகள், அம்மா, மருமகள், அவர்களின் வீட்டில் இருக்கும் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவரின் வீட்டில் திருமண விழா ஒன்றுக்காக ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால் அங்கு பலர் வந்து சென்றுள்ளனர். இப்படித்தான் அவர் மூலம் பலருக்கு கேரளாவில் கொரோனா பரவி உள்ளது. இதனால் கேரளாவில் செகண்ட் வேவ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காண்டாக்ட் டிரேசிங்

காண்டாக்ட் டிரேசிங்

இவரின் லாரி கிளீனருக்கும் கொரோனா வந்துள்ளது. இந்த லாரி டிரைவரின் மருமகன் அங்கு ஒரு அத்தியாவசிய பொருட்களுக்கான கடை வைத்துள்ளார். இந்த கடையில் பொருட்கள் வாங்கிய மக்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. இவர்களின் காண்டாக்ட் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த கிளஸ்டர் மூலம் கேரளாவில் இரண்டு போலீசாருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

தற்போது எண்ணிக்கை என்ன

தற்போது எண்ணிக்கை என்ன

தற்போது கேரளாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது . அங்கு 4 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு 311 பேருக்கு இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்ததால் கொரோனா ஏற்பட்டுள்ளது .187 பேருக்கு அவர்களின் மூலம் ஏற்பட்ட காண்டாக்ட் மூலம் கொரோனா வந்துள்ளது. 70 பேருக்கு வெளி மாநிலத்தில் இருந்து கொரோனா வந்துள்ளது.

Recommended Video

    Kerala doctor passed away in UK after long battle with coronavirus

    English summary
    Coronavirus: Kerala gets a cluster of cases due to a lorry driver from Koyambedu market.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X