திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருக்கும் பரவவில்லை.. கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் கேரள அரசு.. எப்படி சாத்தியமானது?

கொரோனா வைரஸ் கேரளாவில் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவுக்கு தடுப்பூசி... இந்தியர் தலைமையில் முயற்சி

    திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் கேரளாவில் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு 3 பேருக்கு வைரஸ் பரவிய நிலையில், புதிதாக யாருக்கும் வைரஸ் பரவவில்லை.

    சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 811 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 37141 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கேரளாவில் மூன்றாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இன்னொரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

    மக்கள் இல்லை

    மக்கள் இல்லை

    இந்த வைரஸ் தற்போது புதிதாக கேரளாவில் வேறு யாருக்கும் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பரவிய அதே மூன்று பேருக்கு மட்டும்தான் இந்த வைரஸ் இருக்கிறது. அந்த மூன்று பேரிடம் இருந்தும் வேறு யாருக்கும் இந்த வைரஸ் பரவவில்லை. இவர்கள் மூன்று பேரும் திருச்சூரில் தனி அறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் மொத்தமாக அங்கு மக்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டு, தொடர்பின்றி இருக்கிறார்கள்.

    எப்படி சிகிச்சை

    எப்படி சிகிச்சை

    இந்த நிலையில் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 2800 பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்டுகிறது. இதில் 84 பேர் கேரளாவில் மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மீதம் இருக்கும் நபர்களை வீட்டிற்கு வெளியே வர கூடாது என்று அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த நோயை பரவாமல் தடுக்க அம்மாநில அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    நிஃபா வைரஸ்

    நிஃபா வைரஸ்

    கேரளாவில் தற்போது வந்திருக்கும் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட அங்கு பரவிய நிஃபா வைரஸ் போன்றதாகும். கேரளாவில் பரவி வந்த நிஃபா வைரஸ் காரணமாக, அங்கு மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் ஒரு மாதத்தில் மொத்தமாக 22 பேர் இறந்து பலியானார். இந்த நிஃபா வைரஸ் அந்த மாநிலத்தையே உலுக்கியது. ஆனால் அதையும் அம்மாநில அரசு வெற்றிகொண்டது. மொத்தமாக நோயை கட்டுப்படுத்தியது.

    எப்படி நடக்கிறது

    எப்படி நடக்கிறது

    கேரளாவில் கொரோனாவை வைரஸை கட்டுப்படுத்த அவர்கள் காண்டாக்ட் டிரேஸ் (contact trace) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பின் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இதுதான் காண்டாக்ட் டிரேஸ் முறை. இதை பயன்படுத்திதான் இந்த வைரஸை சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா தலைமையில் அம்மாநில அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

    சுவாசம் சரியாகி வருகிறது

    சுவாசம் சரியாகி வருகிறது

    மற்ற நாடுகள் இந்த வைரஸ் காரணமாக மக்களை பலி கொடுத்து வருகிறது. கேரளாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மூன்று பேரும் கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறி வருகிறார்கள். இவர்களுக்கு சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது. இவர்கள் இன்னும் ஒரு மாதத்திற்கு மொத்தமாக குணமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். நாள் பட நாள் பட கொரோனா வைரஸ் வீரியம் இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு வைரஸ் மேலும் பரவ வாய்ப்பில்லை.

    செம அதிரடி

    செம அதிரடி

    இந்த வைரஸ் தாக்கிய 3 பேரும் தொடர்பு கொண்ட 2800 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் தற்போது தனியாக வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டது. தற்போது மாநில பேரிடர் விலகிக் கொள்ளப்பட்டுள்ளது. நிஃபா மூலம் கற்ற பாடத்தை அம்மாநில அரசு இந்த கொரோனா தாக்குதலில் பயன்படுத்தி வருகிறது. அதில் அம்மாநிலம் பெரிய அளவில் வெற்றியும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus Kerala: The state government doing some great speed work against the attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X