உச்சம்.. மக்களுக்கு பறந்த வார்னிங்.. அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியம்- கொரோனாவால் பீதியாகும் கேரளா!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அடுத்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கேரளாவிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்தது. ஆனால் தற்போது கேரள மாநிலம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கத்தோடு அங்கு ஒமிக்ரானும் பரவத் தொடங்கி வருகிறது. ஒமிக்ரானால் அங்கு ஐநூறுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்.
என்னது 2454 தெருக்களா! சென்னையில் தீவிரமாக பரவும் கொரோனா கேஸ்கள்! - விழிபிதுங்கும் மாநகராட்சி

கேரளா
கேரளாவில் ஒரே வாரத்தில் 100 சதவீதமாக கொரோனாவின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரேநாளில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

கொரோனா
கேரளாவில் தற்போதுவரை ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட 15% ஆக உயர்ந்துள்ளது. அதனால், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஒமிக்ரான்
ஒமிக்ரான் தொற்று அதிகரித்துவரும் நேரத்தில், ஒமிக்ரானால் அங்கு 48 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 33- பேர் குறைந்த ரிஸ்க் கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், இரண்டுபேர் அதிக ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் மீதமுள்ள 9 பேர் அவர்களின் தொடர்புகள் மூலமாக ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு
மேலும், ஒமைக்ரான் கண்டறியப்பட்டவர்களில் 12 பேர் கோழிக்கோடு, 9 பேர் எர்ணாகுளம், 7 பேர் திரிசூர், 6 பேர் திருவனந்தபுரம், 4 பேர் கோட்டயம், 2 பேர் மலப்புரம், கொல்லம், இடுக்கி, ஆலப்புழா, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் 3 வாரங்களுக்குள் உச்சத்தை எட்டும். தினசரி பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் மூன்று வாரத்தில் அது மிகவும் வேகமாகப் பரவி விடும். அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.