திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கேரளா மாணவர் ?| First Indian who tested positive for Corona virus now

    திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அம்மாநிலம் இதற்காக போர்க்கால அடிப்ப்டையில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயமாகி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1770 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனால் அதிசயமாக கேரளாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரும் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடைசியாக நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது.

     திணறும் சீனா.. சாதித்த கேரளா.. கொரோனாவை மொத்தமாக கட்டுப்படுத்தியது.. 3 பேரும் குணமான அதிசயம்! திணறும் சீனா.. சாதித்த கேரளா.. கொரோனாவை மொத்தமாக கட்டுப்படுத்தியது.. 3 பேரும் குணமான அதிசயம்!

    என்ன உதவவில்லை

    என்ன உதவவில்லை

    ஆனால் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் காண்டாக்ட் டிரெஸ் முறை பெரிய அளவில் உதவவில்லை. இந்த முறை மூலம் வைரஸ் தாக்கியவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பு வைத்தார்கள். அவர்களிடம் இருந்து யாருக்கு எல்லாம் வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிப்பார்கள். ஆனால், கேரளாவில் இது பெரிய அளவில் உதவவில்லை. காரணமாக இந்த வைரஸ் தாக்கிய மூன்று பேரும் சீனாவில் இருந்து வந்தவர்கள். அவர்களிடம் இருந்து கேரளாவில் யாருக்கும் வைரஸ் பரவவில்லை.

    பரவவில்லை

    பரவவில்லை

    ஆனால் இவர்கள் மூவரிடம் இருந்தும் வைரஸ் பரவவில்லை என்றாலும் கூட, இவர்கள் தொடர்பு கொண்ட எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தமே 3500 பேருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் இந்த வைரஸ் மூன்று பேரை தவிர வேறு யாருக்கும் பரவவில்லை என்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் நோய் தாக்கிய மூன்று பேருக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எத்தனை நாட்கள்

    எத்தனை நாட்கள்

    பொதுவாக இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு 14 நாட்களுக்குள் பரவ வாய்ப்புள்ளது. அதாவது ஏ என்ற நபருக்கு நோய் தாக்கி இருந்தால், அவர் அதற்கு முன் 14 நாட்களில் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பார்கள். இதனால் நோய் தாக்கிய நபரை, மற்றும் அவர் தொடர்பு கொண்ட நபர்களை 14 நாட்கள் தனியாக வைத்து இருப்பார்கள். இதன் மூலம்தான் உலகம் முழுக்க இந்த வைரஸை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் கேரளாவில் இப்படி இல்லை. கேரளாவில் இந்த 2500 பேரையும், நோய் தாக்கிய 3 பேரையும் 28 நாட்கள் தனியாக வைத்து இருந்தனர். இதனால் அங்கு மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் கூட வைரஸ் பரவ வாய்ப்பு அளிக்க கூடாது. 100% உறுதியான பின்தான் நோயாளிகளை வெளியே அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் 2500 பேரையும் 28 நாட்களாக தனியாக வைத்து தீவிரமாக சிகிச்சை அளித்தனர். இதுதான் அங்கு வைரஸை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தது.

    நேரடி தொடர்பு

    நேரடி தொடர்பு

    அதேபோல் இன்னொரு பக்கம் கேரளாவில் உள்ள மருத்துவர்கள் நேரடியாக வுஹன் மருத்துவர்கள் உடன் இது தொடர்பான விசாரணை செய்தனர். அங்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை நேரடியாக இங்கிருந்து வீடியோ கால் மூலம் கற்றுக்கொண்டனர். அதை இங்கே முயன்று பார்த்தனர். அதேபோல், நிஃபா வைரஸ் மூலம் இவர்கள் கற்ற பாடமும் பெரிய அளவில் கேரளாவில் நோயை கட்டுப்படுத்த உதவியது.

    என்ன எடுத்துக்காட்டு

    என்ன எடுத்துக்காட்டு

    • கேரளாவில் கொரோனாவை மூன்று விதங்களில் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.
    • நோயாளிகளை தனிமை படுத்தி தொடர் சிகிச்சை.
    • நோயாளி தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்தி தொடர் சோதனை.
    • 14 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களாக செய்யப்பட்ட தொடர் சிகிச்சை. இதுதான் அங்கு நோயை கட்டுப்படுத்த காரணம் ஆகும். கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது, இந்தியாவிற்கு மிகப்பெரிய மருத்துவ எடுக்கட்டாக மாறியுள்ளது.

    English summary
    Coronavirus: Kerala winning against COVID -19 is a real lesson for China and other countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X