திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் அதிக அளவில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் அங்கு வரும் கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மொத்தமாக கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு உள்ளது. இன்று கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 1004 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது.

Coronavirus: Poor people need not to pay for quarantine facility says Kerala CM

கேரளாவில் இப்போது கேஸ்கள் அதிகரிக்க காரணம் வெளிநாட்டில் இருந்து அம்மாநிலத்திற்கு வரும் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு விமானங்கள் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு கேரளா வரும் இவர்கள் மூலம் கேரளாவில் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. அதேபோல் கேரளாவில் பிற மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் மூலமும் பலருக்கு கொரோனா பரவியது.

இந்த நிலையில் கேரளாவிற்கு இப்படி வெளி மாநிலங்களில் இருந்து பலர் வருகை தரும் நிலையில், கேரளாவிற்கு இனி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்து, அங்கு அரசு முகாமில் தாங்கும் நபர்கள் அதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கூறியது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

இந்த நிலையில் கேரளாவில் இருக்கும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு முகாமில் தங்கும் இவர்களிடம் இப்படி பணம் வசூலிப்பது தவறு என்று பலர் விமர்சனம் செய்தனர். முக்கியமாக எதிர்க்கட்சிகள் பினராயி அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைக்க தொடங்கினார்கள்.

120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்!120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்!

தற்போது இது தொடர்பாக பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அரசு முகாமில் தாங்கும் எல்லோரும் காசு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் நபர்கள் மட்டும் கொடுத்தால் போதும். ஏழைகள் கொடுக்க வேண்டியது இல்லை. ஏழைகள் இதனால் கஷ்டப்பட போவதில்லை.

இது தொடர்பான விளக்கம், முழுமையான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

English summary
Coronavirus: Poor people need not to pay for quarantine facility says Kerala CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X