திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி!

ஜோலியை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Kerala Jolly : கேரளாவை உலுக்கிய 6 சயனைடு கொலையில் தொடரும் அதிர்ச்சி !-வீடியோ

    கேரளா: நம்ம ஊர்ல பாயாசம் மாதிரி.. கேரளாவில் ஆட்டுக்கால் சூப் போல.. அதான் குடும்பத்தில் இருந்த 6 பேருக்கும் சூப்பில் விஷம் வைத்து கொன்றுள்ளார் ஜோலி. கேரளாவே ஷாக்கில் உறைந்து கிடக்கும் இந்த சமயத்தில், போலீசார் ஜோலி உட்பட 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போகிறார்களாம்! இதனால் இன்னும் என்னென்ன கர்ணகொடூரங்களை ஜோலி செய்துள்ளாரோ என்ற பரபரப்பு கலந்த பீதி மக்களிடம் தொத்தி கொண்டுள்ளது!

    கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோலி ஜோசப் உள்பட 2 பேரை போலீஸ் 6 நாள் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. ஜோலி ஜோசப்பை அக்டோபர் 16 ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சொத்துக்காக, அதிகாரத்துக்காக தன் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துள்ளார் ஜோலி என்ற 47 வயது பெண். இப்போதுதான் 47 வயது.. 14 வருடங்களுக்கு முன்னால் இந்த பெண்ணின் வயதையும், செய்திருக்கும் காரியத்தையும் நினைத்தால் நம் உடம்பே நடுங்குகிறது.

    கழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளாகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா

    அலர்ஜி

    அலர்ஜி

    பெண்கள் என்றாலே ஜோலிக்கு அலர்ஜியாம்.. அதனால் மாமியார் உட்பட 2வது கணவன் ஷாஜூவின் மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் என பெண்களை குறி வைத்து கொன்றுள்ளார். இவர்களை தவிர, மேலும் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சியும் செய்திருக்கிறாராம்.

    6 பேர் கொலை

    6 பேர் கொலை

    மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது என்று கணவர் சொன்னதால் அவரையும் போட்டு தள்ளிவிட்டார் ஜோலி. ஆக மொத்தம் 6 கொலைகளை ஜோலி அரங்கேற்றி உள்ளார். இதில் 5 கொலைகளை அதாவது தன் புருஷன் உட்பட 5 பேரை தான்தான் கொன்றதாக ஜோலியே துணிச்சலுடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

    நிரூபணம்

    நிரூபணம்

    ஆனால், இப்படி 6 பேரை கொலைகளை ஜோலி மட்டுமே செய்திருக்க வாய்ப்பிருக்காது என்று போலீசார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடனேயே சந்தேகித்தனர். அதனால், இதுதொடர்பாக விசாரித்ததில் ஜோலிக்கு 2 பேர் உதவி இருக்கிறார்கள். நகைக்கடையில் வேலை பார்க்கும் மேத்தீவ், பிராஜி குமார் ஆகியோர்தான் அவர்கள். சூப்பில் கலந்து தர சயனைடை ஜோலிக்கு தந்தது இவர்கள்தான் என்பது நிரூபணமானது.

    போலீஸ் கஸ்டடி

    போலீஸ் கஸ்டடி

    இதையடுத்து, ஜோலி உட்பட 2 பேரை தாமரசேரி முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 2 பேரையும் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான உத்தரவும் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வெளிவரும் பகீர்கள்

    வெளிவரும் பகீர்கள்

    ஜோலி ஜோசப் உட்பட 2 பேரை போலீஸ் 6 நாள் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதாவது வரும் அக்டோபர் 16 ம் தேதி வரை இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். இதில் இன்னும் என்னென்ன சமாச்சாரங்களை ஜோலி அள்ளி வீசப்போகிறாரா தெரியவில்லை என்பதால், பெரும் பரபரப்பில் ஜோலி விவகாரம் தலைதூக்கி உள்ளது.

    English summary
    Kerala Court has granted permission for 6 days investigation from two including serial killer jolly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X