திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனக்கு மிஞ்சிதான் தானம்- இது பழமொழி.. தனக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் தானம்.. இது மேரியின் புதுமொழி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஊரடங்கால் சரி வர வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களுடன் ரூ 100ஐ இணைந்து வழங்கி வருவது வைரலாகி வருகிறது.

கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்து வந்தனர்.

மேலும் நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்து பாதித்துள்ளார்கள். இவர்களுக்கு உதவி செய்ய எர்ணாகுளம் மாவட்டம் கும்பலங்கி கிராமத்தை சேர்ந்த மேரி செபாஸ்டியன் முன் வந்துள்ளார்.

மழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம் மழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்

ரூ 100-ஐ சேர்த்து

ரூ 100-ஐ சேர்த்து

ஆம் தனது வீட்டில் தயாரிக்கும் உணவுப் பொட்டலங்களுடன் சேர்த்து பல பகுதிகளுக்குச் சென்று உணவு பொட்டலங்களையும் பெற்றுக் கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு போய் கொடுக்கிறார். மேலும் யாருக்கும் தெரியாமல் உணவு பொட்டலத்துடன் ரூ 100-ஐ சேர்த்து செல்லோடேப் போட்டு சுற்றி பாதுகாப்பாகவும் கொடுக்கிறார்.

காவலர்

காவலர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் மேரி செபாஸ்டியன் கொடுத்த சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார். அதில் ரூ 100 இருந்ததை பார்த்து விட்டு நண்பர்களுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அவர்களும் தங்களது உணவு பொட்டலத்தில் ரூபாய் நோட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

மேரி செபாஸ்டியன்

மேரி செபாஸ்டியன்

அவர்களுக்கு உணவு வழங்கியது யார் என பார்த்த போது மேரி செபாஸ்டியன் என தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணை தேடி பிடித்து கேரளா மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இவரே ஒரு கூலித் தொழிலாளி, கொரோனா ஊரடங்கால் 15 நாட்கள் மட்டுமே இவர் வேலைக்கு சென்றுள்ளார். அதில் வந்த பணத்தை வைத்து அவர் உதவி செய்துள்ளார். தனக்கு இல்லாட்டியும் இல்லாதோருக்கு தானமாக கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் என்னால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்ய நினைத்தேன். நான் அவ்வப்போது டீ குடிப்பேன்.

குளிர்

குளிர்

அது போல் மழை, வெள்ளத்தால் பாதித்த மக்கள் குளிரை போக்க டீ குடிக்க நினைப்பர். ஆனால் அவர்களிடம் காசு இல்லை என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் கொடுக்கும் காசு டீக்குடிக்கவாவது வைத்துக் கொள்ளவார்களே என்ற எண்ணத்தில்தான் கொடுக்கிறேன். இந்த ரூபாய் நோட்டை வைத்தது நான்தான் என தெரியக் கூடாது என நினைத்தேன். ஆனால் தெரிந்துவிட்டது என்றார்.

English summary
Daily wages Kerala Woman issues Rs 100 with food packets for flood affected areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X