திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவிதா செய்த காரியத்தை பார்த்தீங்களா.. சடலத்தை ரூமுக்குள் வைத்து கொண்டு "ஜெபம்".. அதுவும் 3 நாள்!

தாயின் சடலத்தை 3 நாள் வீட்டுக்குள் வைத்திருந்தார் மகள் ஒருவர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கவிதா செய்த காரியத்தை பார்த்தீங்களா... சடலத்தை ரூமுக்குள் வைத்து கொண்டு, ஜெபம், ஜெபம், ஜெபம் என்று பிரார்த்தனையிலேயே இருந்துள்ளார்.. எப்படியும் அந்த சடலம் உயிர்த்தெழுந்துவிடும் என்று நம்பிக் கொண்டே 3 நாளும் பிணத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருவலச்சேரியை சேர்ந்தவர் கவிதா..இவர் ஒரு ஹோமியோபதி டாக்டர்.. இவரது அம்மா பெயர் ஓமனா.. இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீடு ஒரே ஒரு ரூம் கொண்டது.. அதற்குள்ளேயே 2 பேரும் புழங்கி வந்தனர்.

dead body: daughter keeps mothers body for 3 days in palakkad

சில வருஷங்களுக்கு முன் தாயும், மகளும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துவிட்டனர்.. இவர்கள் திடுதிப்பென்று மதம் மாறியதால், அது பிடிக்காமல், எல்லா சொந்தக்காரர்களும் இவர்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். ஒட்டு உறவு என்று யாருமே இல்லை.

இந்நிலையில் ஓமனாவுக்கு சர்க்கரை வியாதி அதிகமாக இருந்தது.. இதன் காரணமாகவே ஏற்கனவே இவரது காலை வெட்டி எடுத்துவிட்டனர்.. படுத்த படுக்கையாகவே ரொம்ப காலம் இருந்தவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டார்.

ஆனல் கவிதா யாருக்குமே இந்த விஷயத்தை சொல்லவில்லை... சடலத்தை அந்த ரூமுக்குள்ளேயே வைத்திருந்தார்.. எப்படியும் கடவுள் வருவார், அம்மாவை உயிரோடு எழுப்பி தந்துவிடுவார் என்று நம்பிக் கொண்டே ஜெபம் செய்து வந்திருக்கிறார்.. இப்படியே 3 நாளும் ஓமனாவின் சடலத்துடன் கவிதா இருந்துள்ளார்.. 3 நாளாகியும் அம்மா உயிர்த்தெழுந்து வரவே இல்லை.

சாப்பாடு, தண்ணி இல்லாமல் விடாமல் பிரார்த்தனையும் செய்தபடியே இருந்தார் கவிதா. 3 நாள் கழித்து, கவிதா வழக்கமாக பயணம் செய்யும் ஆட்டோக்காரருக்குதான் விஷயம் தெரிந்திருக்கிறது.. அதன்பிறகு அவர் பதறியடித்து கொண்டு போலீசுக்கு போய் தகவலை சொன்னார். அவர்கள் வந்து சடலத்தை மீட்டு கொண்டு போனார்கள்.

தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. இலவச இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர்தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. இலவச இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

இதையடுத்து போலீசார் ஓமனா சடலத்தை மீட்டு, பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... மத நம்பிக்கை இந்த அளவுக்கு முற்றி போனதை நினைத்து கவலைப்படுவதா? அல்லது கவிதா ஒரு டாக்டர் என்பதை நினைத்து வருத்தப்படுவதா? தெரியவில்லை.

English summary
dead body: daughter keeps mothers body for 3 days in palakkad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X