திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடு ரோட்டில் ஏன் நின்னேன் தெரியுமா.. டிரைவரை திட்டாதீங்க.. தில் கேரள பெண்ணின் பளிச் பேட்டி!

அரசு பஸ்ஸை நான் வழிமறித்து நிற்கவில்லை என்று பெண் விளக்கம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்த டிரைவரால்தான் நான் உயிர் பிழைச்சேன்'.. Kerala woman about Viral video !

    திருவனந்தபுரம்: "ப்ளீஸ்.. யாரும் அந்த டிரைவரை திட்டாதீங்க.. அந்த டிரைவரால்தான் நான் உயிர் பிழைச்சேன்" என்று ராங்ரூட்டில் வந்த பஸ் டிரைவரை வழிமறித்து கெத்து காட்டி நின்றதாக சொல்லப்பட்ட கேரளத்து பெண் தெரிவித்துள்ளார்.

    2 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. கேரளாவின் பெரும்பாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், அரசு பஸ் வந்துள்ளது. சாலைவிதிகளை மீறியபடி எதிர்புறத்தில் பஸ் வருவதை டூவீலரில் வந்த ஒரு பெண் பார்த்தார்.

    பஸ் ராங் ரூட்டில் வருகிறது என்று தெரிந்தும், மற்ற வாகன ஓட்டிகள், பஸ்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி போனார்கள். ஆனால் இந்த பெண் மட்டும் அப்படியே நடுரோட்டில் பஸ்ஸுக்கு முன்னாடி நின்றார். இதை டிரைவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    ரண களத்திலும் கிளுகிளுப்பா.. இவரன்றோ சூப்பர் கணவர்.. மனைவிக்கு எப்படி கத்து கொடுக்கிறார் பாருங்க!ரண களத்திலும் கிளுகிளுப்பா.. இவரன்றோ சூப்பர் கணவர்.. மனைவிக்கு எப்படி கத்து கொடுக்கிறார் பாருங்க!

    விழித்தார்

    விழித்தார்

    அந்த பெண் ஒதுங்கி போவார் என்று நினைத்து அப்படியே பஸ் எடுக்காமல் இருந்தார். ஆனால் பெண் அசரவே இல்லை. ரொம்ப நேரம் கழித்து, வேறு வழியில்லாமல் டிரைவர் பஸ்ஸை கிளப்பி கொண்டு சரியான வழியில் சென்றார். அதன்பின்புதான் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்தார்.

    வீடியோ

    வீடியோ

    நடுரோட்டில் பஸ்ஸை மறித்து பெண் நின்ற இந்த வீடியோதான் வைரலானது. இது சம்பந்தமாக சூர்யா மானீஷ் என்ற அந்த பெண் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,"இப்படி வீடியோ வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் டிரைவருக்கு சவால் விடுவதற்காக அப்படி நிற்கவில்லை.

    ஸ்கூல் பஸ்

    அந்த வீடியோவில் கடைசி நேர காட்சிதான் இருந்தது. ஆனால், நான் அப்படி பஸ் முன்னாடி நிற்க ஒரு காரணம் இருந்தது. அந்த ரோட்டில் எனக்கு முன்னாடி ஒரு ஸ்கூல் பஸ் சென்று கொண்டிருந்தது. நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எனக்கு முன்னால் ஒரு ஸ்கூல் பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் இடது புறம் சென்று நின்றது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பியபோது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பஸ் ஒன்று இன்னொரு வண்டியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்தது. அப்போது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே ஷாக் ஆகி நின்றேன். அந்த பஸ் வந்த வேகத்துக்கு எனக்கு என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம்.

    திட்டாதீங்க

    திட்டாதீங்க

    ஆனால் அந்த பஸ் டிரைவரால்தான் நான் உயிர் தப்பினேன். அவரை திட்டாதீங்க. அவர்தான் பஸ் வேகத்தை உடனே குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார். அப்பறம்தான் எனக்கு பயமே போச்சு. 7 வருஷமா வண்டி ஓட்டுறேன். இப்படியெல்லாம் இதற்கு முன்பு எனக்கு நடந்ததே இல்லை" என்றார்.

    எப்படியோ ஹீரோயின் ஆயாச்சு.. விடுங்க சேச்சி.. சேஃப் டிரைவிங்!

    English summary
    "I didnt challenge the KSRTC Bus, I was Scared" explained Kerala woman about Viral video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X