திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மனுஷனாய்யா நீ".. தெரு நாயை காரில் கட்டி.. தரதரவென இழுத்து சென்ற கேரள தாத்தா!

நாயை கயிற்றால் கட்டி காரில் இழுத்த நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஒரு தெருநாயை காரின் பின்பகுதியில் கயிற்றால் கட்டி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றுள்ளார் யூசுப் என்பவர்! பாவம், அந்த நாய்க்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் யூசுப்.. 62 வயதாகிறது.. இவர் வீட்டு பக்கத்தில் ஒரு தெருநாய் சுற்றி கொண்டே இருந்ததாம்.. அடிக்கடி குரைத்து கொண்டும் இருந்திருக்கிறது.. இது யூசுப்புக்கு எரிச்சலை தந்துவிட்டது.

அந்த தெருவில் இருந்த மற்றவர்களுக்கும் இந்த நாய் குரைப்பதை கவனித்துள்ளனர்.. அதனால், வேறு இடத்திற்கும் அந்த நாயை துரத்திவிட முயன்றனர்.. ஆனால், எங்கே துரத்தி விட்டாலும், அந்த நாய் அதே இடத்துக்கு வந்துவிடுகிறதாம்.

"சைலன்ட்"டாக சர்வே எடுத்து பார்த்த எடப்பாடியார்.. சாதகமாக எதுவும் இல்லையாமே.. "அந்த" ஓட்டாவது வருமா?

காயங்கள்

காயங்கள்

அந்த நாய் எதற்காக கத்தியது, பசியா? உடம்பில் எங்காவது காயங்கள் ஏற்பட்டதா? அல்லது மழை, குளிர் பாதிப்பா? என்று எதுவுமே தெரியாத நிலையில், யூசுப் அந்த நாயை தொலைவில் எங்காவது கொண்டு போய்விட முடிவு செய்தார். அதற்காக அந்த நாயின் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டினார். அந்த கயிற்றின் இன்னொரு முனையை தன்னுடைய காரின் பின்பக்கத்தில் கட்டிக் கொண்டு, வேகமாக ஓட்ட ஆரம்பித்தார்.. காரின் வேகத்துக்கு அந்த நாயால் ஓடமுடியவில்லை.

 இளைஞர்

இளைஞர்

கீழே விழுந்து புரண்டு தவித்தது.. ரோட்டில் உரசி ரத்தம் கொட்டியது.. இப்படி காரில் நாயை கட்டி இழுத்து செல்வதை அந்த வழியாக பைக்கில் சென்ற ஒரு அகில் என்ற இளைஞர் கவனித்தார். வேகமாக செல்லும் காரை அந்த நாய் துரத்தி செல்வதாக அகில் நினைத்துவிட்டார்.. பிறகுதான் உற்று பார்த்தால், கயிற்றால் கட்டி இழுத்துகொண்டு போவது தெரிந்தது. இதை பார்த்து பதறிப்போன அவர், தன் பைக்கில் வேகமாக சென்று காரை வழிமறித்து நிறுத்தினார்.. ஏன் இப்படி நாயை கட்டி இழுத்து விட்டு போறீங்க? என்று கேட்டார்.

படுகாயம்

படுகாயம்

அதற்குள் நாயை காரில் இழுத்து போவதை அந்த பகுதியில் இருந்தோர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர். பிறகு யூசுப், காரில் இருந்து இறங்கிய, கட்டிய நாயை அவிழ்த்து அங்கேயே விட்டு விட்டு காரை எடுத்து கொண்டு சென்று விட்டார். அந்த நாய் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியது.. உடம்பெல்லாம் காயங்களுடன் வலியால் துடித்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதை பார்த்த பொதுமக்கள், விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள், தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து நாயை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே, இணையத்தில் இந்த கொடுமையான காட்சியை பார்த்த செங்கமநாடு போலீசார், தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து, யூசுப்பை கைது செய்தனர்.

English summary
Dog Tied to car dragged on Road in Kerala, Viral Video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X