• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

16 வயசு பொண்ணு.. ஃபர்ஸ்ட் கோழிக்கறி.. அப்பறம் ஐஸ்கிரீம்.. மட்டன் சூப் ஜோலியை மிஞ்சிய படுகொடூரம்

|

திருவனந்தபுரம்: பயங்கரமான கொலை ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.. கிட்டத்தட்ட மட்டன் சூப் ஜோலி போலவே இந்த கொடூரம் உள்ளது.. இதனால் அந்த மாநிலமே மிரண்டு கிடக்கிறது!

கேரளாவின் காசார்கோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஆன் மேரி.. 16 வயசாகிறது.. இவருக்கும் இவரது அப்பா பென்னிக்கும் கடந்த 3-ம் தேதி திடீரென்ற உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் வெள்ளரிகுண்டு பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது அவர்களுக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. ஆனால் தொற்று இல்லை என தெரியவந்தது.. பிறகு மற்ற டெஸ்ட்கள் எடுக்கப்பட்டது.. அதில், மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது.

அரபிக்கடலில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும்... 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - எச்சரிக்கும் வானிலைஅரபிக்கடலில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும்... 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - எச்சரிக்கும் வானிலை

ஆகிசேருபுழா

ஆகிசேருபுழா

அதனால், அந்த ஆஸ்பத்தியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சேருபுழாவில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை எடுத்து கொண்டனர். ஆனால், மேரிக்கு நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது.. அதனால் 6-ம் தேதி மேரி இறந்துவிட்டார். பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அப்போதுதான் மேரிக்கு ட்ரீட்மென்ட் தந்த எல்லா டாக்டர்களுமே ஷாக் ஆனார்கள்.. உடம்பில் விஷம் இருந்தது தெரியவந்தது.

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்

உடனே போலீசுக்கு விஷயம் போனது.. அவர்களும் விசாரணையை ஆரம்பித்தனர்.. மேரியும், அவர் அப்பாவும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளனர்.. இந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டபிறகுதான் 2 பேருக்குமே ஒரே நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போனது தெரியவந்தது. உடனே உஷார் அடைந்த போலீசார் பென்னியையாவது பிழைக்க வைக்க வேண்டும் என்று கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றினர். அங்கு அவருடைய கல்லீரல் 80 சதவீதம் டேமேஜ் ஆகிவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

மேரி

மேரி

பிறகு குடும்பத்தினர் மீது போலீசாருக்கு கவனம் திரும்பியது.. மேரியின் அம்மா, மேரியின் அண்ணன் 2 பேரும்தான் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.. அதேசமயம் 2 பேருமே ஒரு டென்ஷனும் இல்லாததை பார்த்த போலீசாருக்கு டவுட் அதிகமாகிவிட்டது.. அனால் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போதுதான் மேரியின் அண்ணன் ஆல்பினின் நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமாக சந்தேகத்தை ஏற்படுத்தியது.. உடனே அவரை பிடித்து விசாரித்ததில், போலீசாரே அதை கேட்டு மிரண்டு விட்டனர்.

விஷம்

விஷம்

ஜூலை 30-ம்தேதி ஐஸ்கிரீம் ரெடி பண்ணி உள்ளார் மேரியின் அண்ணன் ஆல்பின்.. 2 கப்களில் தனித்தனியாக அந்த ஐஸ்கிரீமை போட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்திருக்கிறார்... முதல் கப்பில் இருந்த ஐஸ்க்ரீமை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர்.. 2வது கப்பில் இருந்த ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து அதை குடும்பத்தினருக்கு தந்திருக்கிறார்.. மேரியின் அம்மா ஐஸ்கிரீம் பிடிக்கவில்லை என்று சொல்லி அதை சாப்பிடவில்லை.. அதனால் பென்னியும், மேரியும் மட்டும் சாப்பிட்டுள்ளனர்.

எலி மருந்து

எலி மருந்து

இதற்கு பிறகுதான் தந்தை, மகளுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. இந்த ஐஸ்கிரீமை ஆல்பின்தான் ரெடி பண்ணினார்.. இதை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடியே சிக்கனில் எலி மருந்தை கலந்து குடும்பத்தினருக்கு தந்திருக்கிறார்.. ஆனால் அதில் விஷத்தை குறைவாக கலந்துவிட்டதால், யாருக்கும் எதுவும் ஆகவில்லை.. அதனால்தான் ஐஸ்கிரீமில் நிறைய விஷத்தை கலந்து தந்துள்ளார். எந்த மலி விஷம் அதிகம் பாய்சன் தரக்கூடியது என்று இன்டர்நெட்டில் தேடி கண்டுபிடித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

இது எல்லாத்துக்கும் காரணம், ஆல்பினுக்கு தனியாக வாழ ஆசையாம்.. 21 வயதாகிறது.. எந்த வேலை வெட்டிக்கும் போவது இல்லை.. எப்பவுமே செல்போனே கதி என்று இருந்திருக்கிறார்.. அதனால் குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர்.. எரிச்சலைடந்த ஆல்பினுக்கு இந்த குடும்பத்துடன் வாழ்வது பிடிக்கவே இல்லையாம்.. மொத்த குடும்பத்தையும் விஷம் வைத்து கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்துள்ளார்.. இப்போது இந்த சைக்கோ அண்ணனை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. நடந்த சம்பவத்தை எல்லாம் கேட்டு, கேரளாவே மிரண்டு கிடக்கிறது.

English summary
Kerala man murders sister by mixing rat poison in ice cream, tries to kill whole family to usurp property
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X