விடாது கருப்பாய் துரத்தும் எம்புரான் பட சர்ச்சை! தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு!
திருவனந்தபுரம்: எம்புரான் பட தயாரிப்பாளருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத துறை ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால் அந்த படத்திற்கு தடை கோரி வலது சாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
லூசிபர் 2ஆம் பாகமாக எல் 2: எம்புரான் என்ற பெயரில் கடந்த மார்ச் 27ஆம் தேதி ஒரு திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரித்விராஜ் இயக்கினார். படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடெக்சன்ஸ் இணைந்து தயாரித்தன.

இந்த படத்தில் இந்து மதத்தை பின்பற்றுவோரை புண்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கு மோகன்லாலும் வருத்தம் தெரிவித்தார். அது போல் முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் விஜேஷ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த படத்திற்கு தடை விதிக்குமாறு உத்தரவிட முடியாது என கூறி பாஜக நிர்வாகிக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் கோகுலம் குழும நிறுவனங்களில் ஒன்றான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். கோகுலம் கோபாலன் வீடு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
கோகுலம் குழுமத்தின் கோகுலம் மூவிஸ் தயாரித்ததுதான் எம்புரான் படம். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டு வருவது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications