திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோழிக்கோடு ஏர்போர்ட்டில் இதுதான் நடந்திருக்க வேண்டும்.. காரணங்களை கூறும் முன்னாள் விமானப்படை அதிகாரி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது சாத்தியக்கூறுகளை பட்டியலிடுகிறார் ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி பூஷன் கோகலே தெரிவித்துள்ளார். இவர் 2010ம் ஆண்டு நடந்த மங்களூர் விமான விபத்து குறித்தும் விசாரணை நடத்தியவர் ஆவார்.

Recommended Video

    கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

    துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த 35 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 19 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளார்.

    தற்போது இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ளதால் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது போக போகத் தெரியவரும். ஆனால் மங்களூரில் 2010-ஆம் ஆண்டு நடந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பூஷன் கோகலே கோழிக்கோடு விமான விபத்து குறித்த தகவல்களை பட்டியலிட்டுள்ளார்.

    கொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி! கொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி!

    158 பேர் பலி

    158 பேர் பலி

    இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2010-ஆம் ஆண்டு மங்களூரில் நடந்த விமான விபத்தில் 158 பேர் பலியாகிவிட்டனர். ஆனால் கோழிக்கோடு விமான விபத்தில் பலி எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இதற்கு என்ன காரணம் என்றால் மங்களூர் விபத்தின் போது விமானமே தீப்பிடித்து எரிந்து விட்டது.

    பள்ளம்

    பள்ளம்

    மேலும் மோதிய வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் ஆழமாக விமானம் விழுந்துவிட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெறும் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ஆனால் கோழிக்கோடு சம்பவத்தில் விமானம் விழுந்த இடத்தின் ஆழம் வெறும் 30 முதல் 40 அடி மட்டுமே. விமானம் கேரளாவுக்கு வந்த போது கனமழை பெய்து கொண்டிருந்தது.

    தண்ணீர்

    தண்ணீர்

    மழைக் காலத்தில் ஓடுபாதையில் மழை நீர் தேங்குவது மிகவும் ஆபத்தான விஷயம். ரன்வேயில் முறையான வடிகால் வசதி இருக்க வேண்டும். 3 மி.மீ. தண்ணீர் தேங்கினால் பிரச்சினை இல்லை. தரையிறங்கும் போது பிரேக் பிடித்தால் விமானத்தின் சக்கரம் லாக் ஆகி, பின்னர் ரிலீஸ் ஆகும். அப்போது விமானம் சறுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    ரப்பர்

    ரப்பர்

    அந்த சமயத்தில் விமானம் வலது திசையில் செல்லலாம், இடது திசையில் செல்லலாம், இல்லாவிட்டால் நிற்காமலேயே கூட சென்றுவிடும். தரையிறங்கும் போது விமானத்தின் டயரில் உள்ள ரப்பர் உருகுவதால்தான் புகை வெளிவருகிறது. கோழிக்கோடு விவகாரத்தில் ரன்வேயில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருந்ததுதான் பிரச்சினை.

    விமானம்

    விமானம்

    டேபிள்டாப் ரன்வேயில் விமானங்களை இயக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. விஷயம் என்னவென்றால் விமானத்தை செலுத்தும்போதும் தரையிறக்கும் போதும் போதுமான திறமையும் எச்சரிக்கையும் தேவை. எனவே டேபிள்டாப் ரன்வேக்களை கண்டு அஞ்ச தேவையில்லை. மங்களூரை காட்டிலும் கோழிக்கோடு ரன்வே மிகவும் பெரியது.

    ரன்வே

    ரன்வே

    ஆனால் டேபிள்டாப் ரன்வேக்களில் விமானங்களை தரையிறக்க டிஜிசிஏ சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி டேபிள் டாப் ரன்வேயில் தரையிறக்க விமானிகள் பல கட்ட சோதனைகளில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஒப்புதல் கிடைக்கும். ஒவ்வொரு ரன்வேயும் ஒரு சிறப்பு தன்மையுடன் இருக்கும். விமான நிலையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இருட்டு

    இருட்டு

    கோழிக்கோட்டில் இருட்டு காரணமாக பார்க்க முடியாத நிலையில் அங்கு விமானத்தை தரையிறக்க விமானிகளை கட்டாயப்படுத்தியது எது என்பது குறித்து விசாரணை குழு விசாரணை நடத்தும். 2000 மீட்டர் தூரம் வரை பார்வை திறன் இருந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறெனில் அது மிகவும் சிறந்த பார்வை திறனாகும். மற்றொன்று காற்றும் ஒரு காரணிதான். விமானம் தரையிறங்கும் நேரத்தில் காற்றின் தன்மை முறையற்று இருந்திருக்கும்.

    எரிப்பொருள்

    எரிப்பொருள்

    இது போன்ற நேரத்தில் விமானத்தில் எரிப்பொருள் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து விமானி விமானத்தை எங்கு வேண்டுமானாலும் தரையிறக்கலாம். மற்றொரு இடத்தில் தரையிறக்கும் போது அங்கு வானிலையின் நிலவரம் என்ன என்பதும் முக்கியமாக கவனிக்கப்படக் கூடியதாகும். விமானத்தின் கருப்பு பெட்டியும், விமானி அறையில் இருந்த ரெக்கார்டரும் கிடைத்துவிட்டது.

    எரிப்பொருள் இருப்பு

    எரிப்பொருள் இருப்பு

    அது நல்ல விஷயம். இதன் மூலம் என்ஜின் கோளாறு, எரிப்பொருள் இருப்பு, கட்டுப்பாட்டு விவகாரம், பிரேக் பிரச்சினை என அனைத்தையும் கண்டறிந்துவிடலாம். அதுபோல் கன்ட்ரோல் ரூமுக்கும் விமானிகளுக்கிடையேயான உரையாடலும் காக்பிட் ரெக்கார்டரில் இருந்து மீட்கலாம். ஆனால் மங்களூர் விபத்தில் இவை இரண்டும் கடுமையாக சேதமடைந்துவிட்டன என்றார்.

    English summary
    Ex Air Marshal listed out reasons for Kozhikode plane crash. He was the officer who investigated Mangalore incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X