திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போட்டாவுக்கு போஸ் கொடுத்தது தப்பா போச்சு... கேரளாவில் ஒரு குடும்பமே ஒதுக்கி வைப்பு

Google Oneindia Tamil News

மலப்புரம்: திருமண வரவேற்பின் போது மணப்பெண் போட்டாவுக்கு போஸ் கொடுத்து நடனம் ஆடியதுக்காக ஒரு குடும்பத்தையே ஒதுக்கி வைத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் திரித்தலாவைச் சேர்ந்தவர் டேனிஸ் ரியாஸ். இவரது சகோதரர் அப்துல் காய்க்கு. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, எடப்பல் நகரில் கடந்த டிசம்பர் 28ம் தேதி, ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என அமர்களமாக நடைபெற்றுள்ளது.

குடும்பம் ஒதுக்கிவைப்பு

குடும்பம் ஒதுக்கிவைப்பு

அவை பின்வருமாறு: மணப்பெண் விழாவில் புகைப்படம் எடுக்க விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. குழந்தைகள் மற்றும் பெண்கள் திருமண வரவேற்பு மேடையில் நடனம் ஆடியது. மணப்பெண் ஹெட்போன் போட்டு போனில் பேசியது. போன்ற நான்கு காரணங்களை கூறி திருமண வீட்டாரை உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

நடனம் ஆடியதால் ஒதுக்கிவைப்பு

நடனம் ஆடியதால் ஒதுக்கிவைப்பு

அவை பின்வருமாறு: மணப்பெண் விழாவில் புகைப்படம் எடுக்க விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. குழந்தைகள் மற்றும் பெண்கள் திருமண வரவேற்பு மேடையில் நடனம் ஆடியது. மணப்பெண் ஹெட்போன் போட்டு போனில் பேசியது. போன்ற நான்கு காரணங்களை கூறி திருமண வீட்டாரை உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

மன்னிப்பு கேட்டும் ஏற்கவில்லை

மன்னிப்பு கேட்டும் ஏற்கவில்லை

இந்த செயலுக்காக கமிட்டி உறுப்பினர்களிடம் திருமண வீட்டார் மன்னிப்பும் கேட்டுள்ளனர். ஆனால் மன்னிப்பை ஏற்க மறுத்த கமிட்டி உறுப்பினர்கள் ஒதுக்கி வைத்துவிட்டனர். இந்த தகவலை மணமகனின் சகோதரர் டேனியஸ் ரியாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தனது பதிவில், எங்கள் குடும்பத்தினர் எப்போதும் மதநம்பிக்கை தொடர்பான விஷயங்களில் உள்ளூர் மகல்லு கமிட்டியின் முடிவின் படியே செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தலையிட கோரிக்கை

முதல்வர் தலையிட கோரிக்கை

இது தொடர்பாக முதல்வர் பினாராயி விஜயன், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ விடி பல்ராம் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத வழக்கங்கள் மீறல்

மத வழக்கங்கள் மீறல்

இது தொடர்பாக மகல்லு கமிட்டி செயலாளர் அஜீஸ் அலூர் கூறுகையில், "அந்த குடும்பத்தை நாங்கள் ஒதுக்கிவைக்கவில்லை. ஆனால் கமிட்டியில் இருந்து எந்த ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம். இதுபோன்று திருமண விழாக்களில் மீறப்படும் விதிகளை ஏற்க முடியாது. மதத்தில் உள்ள நடைமுறையின்படியே கமிட்டியில் உள்ள நாங்கள் செயல்படுகிறோம். தனிநபருக்காகவோ ஒரு குடும்பத்துக்காகவோ மத விஷயங்களை மாற்றியமைக்க முடியாது" என்றார்.

English summary
Palakkad, Family in Kerala ostracised by the local mahallu committee over allowing women of the family to pose for photographs in wedding reception.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X