திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்க கடத்தல் புகார்.. கேரள தலைமைச்செயலகத்தில் திடீர் தீ விபத்து.. எதிர்க்கட்சிகள் சந்தேகம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவின் தலைமைச்செயலகத்தில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் அரசுக்கு எதிராக தங்க கடத்தல் புகார்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்து குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.

கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் கூட்டணி அரசுக்கு எதிராக கடுமையாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் தொடங்கி பலருக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

Fire at Kerala Secretariat: Opponents allegate a link to the gold smuggling case

அதேபோல் திருவனந்தபுரத்தின் விமான நிலைய லீஸை அதானி நிறுவனத்திற்கு கொடுக்க பினராயி அரசு மறைமுகமாக உதவியது என்றும் புகார் உள்ளது. திருவனந்தபுரத்தில் விமான நிலைய ஏலத்திற்கான அரசு ஆலோசகராக அதானியின் உறவினரை பினராயி விஜயன் நியமனம் செய்தார் என்றும் புகார் உள்ளது.

இதற்கு எதிராக நேற்று கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் கேரளாவில் திருவானந்தபுரத்தில் உள்ள தலைமைச்செயலகத்தில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கிய கோப்புகள் இருக்கும் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Fire at Kerala Secretariat: Opponents allegate a link to the gold smuggling case

இந்த தீ விபத்து பெரிய அளவில் அடுத்த கட்டிடங்களுக்கு, அறைகளுக்கு பரவவில்லை. 20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை. ஆனால் சில கோப்புகள் எரிந்து நாசமாகி உள்ளது.கேரளாவில் அரசுக்கு எதிராக தங்க கடத்தல் புகார்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்து குறித்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.

மனித சோதனையில் 3 முக்கிய கொரோனா வேக்சின்கள்.. ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை.. இந்தியா துரிதம்!மனித சோதனையில் 3 முக்கிய கொரோனா வேக்சின்கள்.. ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை.. இந்தியா துரிதம்!

முக்கிய ஆதாரங்களை அழிக்கும் வகையில் இந்த தீ விபத்தை, திட்டமிட்டு ஏற்படுத்தி உள்ளது. இதில் ஏதோ சதி இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளது.

English summary
Fire at Kerala Secretariat: Opponents allegate a link to the gold smuggling case files.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X