திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வர்க்கலாவில் மங்களூருவில் இருந்து வந்து கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்தது.
பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று இரவு 610 மணிக்கு மலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் இன்று காலை 7.40 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள வர்க்கலா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் பார்சல் பெட்டியில் திடீரென் தீப்பற்றியது.

Fire In Malabar Express In Kerala

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். பக்கத்து பெட்டிகளில் இருந்த பயணிகள் உடனடியாக ரெயிலை விட்டு இறங்கினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பெட்டியில் எரிந்த தீயை அணைத்தனர்.

கொரோனா பயம் இல்லை.. இனி இப்படியும் மொய் எழுதலாம்.. மதுரை புதுமணத் தம்பதியின் அசத்தல் யோசனை !கொரோனா பயம் இல்லை.. இனி இப்படியும் மொய் எழுதலாம்.. மதுரை புதுமணத் தம்பதியின் அசத்தல் யோசனை !

இந்த தீ விபத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ பிடித்து எரிந்த சரக்கு பெட்டி கழற்றி விடப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக ரெயில்வே கூறியுள்ளது. சரக்கு பெட்டியில் தீ பிடித்தற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகளின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஓடும் எக்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
The Malabar Express train coming from Mangalore in Varkala, Kerala caught fire
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X