திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்; கேரளாவில் கொட்டிய பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை முகாமை தெரிவித்துள்ளது.

கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

Floods: Kerala Death toll rises to 102

பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டத்தில் மலை ஒன்று சரிந்து கிராமமே புதைந்துபோனது. இந்நிலையில் கேரளா அரசின் பேரிடர் மேலாண்மை முகாமை இன்று மழை வெள்ள சேத விவரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்! கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்!

அதில், ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் இன்று வரை மழை வெள்ளத்துக்கு மொத்தம் 102 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 59 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் மலப்புரம் மாவட்டத்தில் அதிக அளவாக 42 பேர் பலியாகி உள்ளனர். 51 பேர் கோணாமல் போயுள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேரும் வயநாட்டில் 12 பேரும் கண்ணூரில் 9 பேரும் பலியாகி உள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா பேரிடர் மேலாண்மை முகாமை அறிக்கை விவரம்:

English summary
Death toll in Kerala floods since Aug 8 to Aug. 14 touched 102 on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X