• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அண்டாவில் மிதந்து கொண்டே வந்த மணமக்கள்.. திட்டமிட்டபடி திருமணம்.. கேரள வெள்ளநீர் பாதிப்பு எதிரொலி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, மணமக்கள் இருவரும் அண்டாவில் மிதந்து கொண்டே, திருமண மண்டபத்துக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

  அண்டாவில் மிதந்து சென்ற மணமக்கள்… கேரளாவில் அரங்கேறிய விநோத திருமணம்

  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.. இதில் மிக மோசமாக உள்ளது கேரள மாநிலத்தின் நிலைமை. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது... இதன்காரணமாக, சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் உள்ளது..

  3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

  மற்றொரு பக்கம் மீட்பு பணிகள் தீவிரமாகி உள்ளன.. கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.. கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்...

  சோகம்

  சோகம்

  அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இன்றைய நிலவரப்படி, கேரள மழை பாதிப்புகளில் சிக்கி மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இனி அடுத்தடுத்த நாட்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன..

   வாகனங்கள்

  வாகனங்கள்


  ஏராளமான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.. பெரும்பாலான சாலைகளில்வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து கொண்டும் சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.. அதேசமயம் நடக்க உள்ள திருமணங்களையும் தடபுடலாக நடத்த முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு மணமக்கள் புதுவழியை தேர்ந்தெடுத்து, திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.

   திருமணம்

  திருமணம்

  இந்த மணமக்கள் இருவருமே செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் பெயர் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா.. இவர்களுக்குதான் இன்றைய தினம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.. அந்த நேரம் பார்த்துதான் எதிர்பாராமல் இப்படி ஒரு வெள்ளம் வந்துவிட்டது..

   சமையல் பாத்திரம்

  சமையல் பாத்திரம்

  திருமணம் நடக்க உள்ள கோயிலுக்கு 2 நாட்களுக்கு முன்புகூட வந்துள்ளனர்.. அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் சூழப்படவில்லை.. ஆனால், இந்த 2 நாளில் மழை அதிக அளவு பெய்ததால், அந்த பகுதி முழுவதுமே மழை தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.. இதனால், மண்டபத்திற்கு மணமக்கள் உட்பட குடும்பத்தினர் யாராலுமே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.. எனினும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எக்காரணம் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.. நீரில் மிதந்தபடியே அந்த பாத்திரத்தில் சென்றதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

  பாதிப்பு

  பாதிப்பு

  இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்தது. ஏற்கனவே தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே திருமணத்துக்கு உறவினர்களை அழைத்திருந்தனராம். இப்போது மழை என்பதால் மேலும் குறைவான அளவிலேயே நபர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது, இதேபோலதான் ஒரு பாட்டி உட்பட நிறைய பேரை அண்டாவை வைத்துதான் காப்பாற்றினார்கள்.. அதேபோல டெக்னிக்கை மணமக்கள் இன்றைய தினம் செய்துள்ளனர்..

  English summary
  Following heavy rains, Kerala bride and groom reach flooded hall in a large cooking vessel, get married
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X