கானாங்கெளுத்தி.. இன்னொரு அதிர்ச்சி.. மீன் சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடக்கிறது?
திருவனந்தபுரம்: மீன்குழம்பு சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டதில், தேவானந்தா என்ற 16 வயது மாணவி உயிரிழந்த அதிர்ச்சி இன்னும் விலகவே இல்லை.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 23 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் கடந்தவாரம் வயநாட்டிற்கு டூர் வந்திருக்கிறார்கள்.. இவர்கள் மாவட்டத்தில் 3 ஹோட்டல்களில் சாப்பிட்டுள்ளனர்.
61 நாள் ரெஸ்ட்! கரைக்கு திரும்பிய மீனவர்கள்.. மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வஞ்சிரம் மீன் இவ்வளவா?

ஃபுட் பாய்சன்
இதில் எந்த ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்டதால், இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை... ஆனால், வயநாட்டில் ஷவர்மா சாப்பிட்டதில், புட் பாய்சன் ஏற்பட்டு 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஷவர்மா சாப்பிடுவது குறித்த விழிப்புணர்வுகள் ஆங்காங்கே ஆரம்பமாகி உள்ளது.

மீன்குழம்பு
இந்நிலையில்தான் மீன்குழம்பு சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவமும் அதே கேரளத்தில்தான் ஏற்பட்டுள்ளது.. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிஜு... இவர் அந்த பகுதியில் உள்ள கல்லறையில் ரூ.200க்கு குதிரை கானாங்கெளுத்தி மீன் வாங்கி உள்ளார். அதனை வீட்டுக்கு எடுத்து சென்று குழம்பு வைத்து குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர்.

விஷத்தன்மை
சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது... முதலில் பிஜூவின் மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது... இரவு நேரம் அவரது மனைவி வயிற்றுவலியால் துடிதுடிக்க ஆரம்பித்தார்.. பிறுகு, பிஜூவுக்கும், அவரது 2வது மகளுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.. இதனால் 4 பேருமே அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.. அவர்கள் சாப்பிட்ட மீனில் விஷத்தன்மை கலந்திருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

கானாங்கெளுத்தி
இதனிடையே, பிஜு மீன் வாங்கிய அதே கடையில், மறுநாள் இன்னொருவர் மீன் வாங்கியிருக்கிறார்.. அந்த மீனில் இருந்து புழுக்கள் வந்துள்ளன... அதனால், பிஜு வாங்கிய மீனும் சுகாதாரமற்றதாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது... இந்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.. வெஞ்சா ரம்மூடு போலீசார், கல்லறை விஏஓ போன்றோர் சம்பவ இடத்திற்கு வந்து, பிஜூ வாங்கிய மீன் கடையில் மீன் மாதிரிகளை சேகரித்து கொண்டு போனார்கள்.. இன்னும் ரிசல்ட் வரவில்லை.. ஏற்கனவே ஷவர்மா பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது, மீன் சாப்பிட்டு, 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.