திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலை நோக்கி செல்லும் வலுவிழந்த கஜா.. மழை எச்சரிக்கை.. குழப்பத்தில் பக்தர்கள்!

சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போகும் வழியெங்கும் கன மழையைக் கொடுக்கும் கஜா- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையை கடந்துவிட்டது. இன்று அதிகாலை இந்த புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

    Gaja Storm: Heavy rain warning for Sabarimala amidst todays reopening

    தற்போது இந்த புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. திண்டுக்கல்லில் நிலை கொண்டு இருந்த இந்த தாழ்வு நிலை அரபிக் கடல் நோக்கி நகர்ந்து செல்கிறது.

    இந்த வலுவிழந்த கஜா புயல் கேரளா வழியே அரபிக் கடல் நோக்கி செல்கிறது. இதனால் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    [செய்யாத சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு.. ஓகி புயலில் கற்ற பாடம் உதவிய கதை!]

    சபரிமலை, கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சியின் சில பகுதிகள், ஆலப்புழாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று சபரிமலை நடை திறக்க உள்ள நிலையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 41 நாள் மண்டல பூஜைகள் சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அங்கு பெண்கள் செல்வது குறித்த பிரச்சனை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு இடையில் வானிலை மைய அறிவிப்பால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    English summary
    Gaja Storm: Heavy rain warning for Sabarimala amidst today's reopening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X