திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர்

அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளார் கேரள பெண் அதிகாரி ஒருவர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: . ஸ்வப்னாவுக்கும் 30 கிலோ தங்க கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேரளா சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.. கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு வருகிறார்.. இதனால் கேரள அரசுக்கு சிக்கல் உருவாகும் அளவுக்கு ஸ்வப்னாவின் கடத்தல் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

Recommended Video

    30 கிலோ தங்கம்.. Kerala-வில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல்

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.. அதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள்.. ஏர்போர்ட்டின் நிலைய சரக்கு பிரிவில் தீவிரமான சோதனையும் நடந்தது.

     gold smuggling by embassy staff employee kerala from uae

    அப்போது, ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக அட்ரசுக்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்தது.. அந்த பெட்டி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து சோதனை செய்தனர்.. அதற்குள் 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து, தூதரக அதிகாரிகளின் பெயரில் இந்த தங்கத்தை கடத்தியது யார் என்று ஆவணங்களை பார்த்தனர்.. அதில், தூதரகத்தில் வேலை பார்த்த சரித் நாயர் என்பவர் பெயர் அடிபட்டது.. உடனடியாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலி ஆதாரம் இந்த தங்கத்தை இவர் கடத்தி வந்துள்ளார்.

     gold smuggling by embassy staff employee kerala from uae

    அதே போல தூதரகத்தில் ஏற்கனவே பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் பெயரும் உள்ளது.. ஆனால் இவரை இப்போது காணவில்லை.. தலைமறைவாகியுள்ளார்... இந்த தூதரகத்தில் ஸ்வப்னா வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாசத்துக்கு முன்பே, அந்த வேலையை விட்டுவிட்டார்.. ஸ்வப்னா, இப்போது கேரள அரசின் ஐ.டி பிரிவில் ஆபரேஷனல் மேனேஜராகப் பணிபுரிந்துவருகிறார்.

    இந்த விஷயம் வெடித்ததையடுத்து, அவரை அப்பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.. ஸ்வப்னா மீது ஏற்கனவே ஒரு புகாரும் நிலுவையில் உள்ளதாம்.. தன்னுடன் வேலை பார்த்தவர் மீது தப்பான தகவலை சொல்லி, புகார் தந்தாராம் ஸ்வப்னா. ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.. ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேருமே முன்னதாக அரசின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளனர்.. வேலையை விட்டுவிட்டாலும், தொடர்ந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அதனால் எப்படியும் இவர்களுக்கு பின்னால் பல விஐபிக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

    இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை தந்து வருகிறது. ஸ்வப்னா விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது.. இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை விடுத்து வருகின்றன.. தங்கம் பிடிக்கப்பட்ட நேரத்தில் தலைமை செயலகத்திலிருந்து ஸ்வப்னாவை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்துள்ளார்கள், முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

     gold smuggling by embassy staff employee kerala from uae

    அரசின் ஐடி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.. சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனுக்கு முதன்மை செயலாளர் ஆவார்.. வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பது பொதுவான விதி.. இதைதான் ஸ்வப்னாவும், சரித் நாயரும் சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

    அதிமுக ஐடி விங் 5 மண்டலமாக பிரிப்பு -2021 சட்டசபை தேர்தலுக்காக விறுவிறுப்பாக தயாராகும் ஈபிஎஸ்,ஓபிஎஸ்அதிமுக ஐடி விங் 5 மண்டலமாக பிரிப்பு -2021 சட்டசபை தேர்தலுக்காக விறுவிறுப்பாக தயாராகும் ஈபிஎஸ்,ஓபிஎஸ்

    இப்போதைக்கு இவர்கள் கடத்தி வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 13 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.. விசாரணை மிக வேகமாக நடந்து வருகிறது. எல்லாம் முடிந்த பிறகுதான், உண்மை குற்றவாளி யார், ஸ்வேதாவுக்கும் இந்த தங்கக்கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம், பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்றெல்லாம் தெரியவரும்.

    English summary
    gold smuggling by embassy staff employee kerala from uae
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X