திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா கடத்தல் ராணி ஸ்வப்னா கூட்டாளி சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பென்ட்- முதல்வரின் மாஜி முதன்மை செயலாளர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு பொருட்களை அனுப்புவதாக கூறி தங்கக் கடத்தல் நடைபெற்று வந்தது அம்பலமானது. இந்த தங்க கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ்.

Gold smuggling: Kerala IAS officer Sivasankar suspended

கேரளா அரசின் தகவல் தொடர்புத் துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா, அரசு அதிகாரிகள் உதவியுடன் தங்க கடத்தல் தொழிலை அமோகமாக செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி ஓடினார் ஸ்வப்னா.

தேர்தல்களில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம்தேர்தல்களில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம்

ஆனால் ஸ்வப்னாவை பெங்களூருவில் சுற்றி வளைத்து தூக்கியது போலீஸ். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும் தகவல் தொடர்பு துறை செயலாளராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதனால் சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிவசங்கரை கேரளா முதல்வர் பினராயி விஜயன் சஸ்பென்ட் செய்துள்ளார்.

English summary
Kerala IAS officer M Sivasankar was on Thursday suspended pending inquiry in the gold smuggling case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X